21 Mar 2014

இணையம் உள்ளுர் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான பொதுச்சபைக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்

SHARE

 (கஜன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுர் அரசசார்பற்ற அமைப்புக்களின் இணைய அமைப்பின் பொதுச் சபைக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வ.கமலதாஸ் அவர்களின் தலைமையில் கல்லடியில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தில் கடந்த 16 அன்று இடம் பெற்றது.
இணையம் அமைப்பின் அங்கம் வகிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப் படுத்தும் 54 அரச சார்பற்ற அமைப்புக்களில்  23 அமைப்புக்களின் அங்கத்தவர்களும், தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில் இணைய அமைப்பின் தலைவியாக பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி திருமதி. சோமாவதி-சிவசுப்பிரமணியம் இவர்களும். உப தலைவராக பட்டிப்பளை ஹின்டோ நிறுவனம் மற்றும் பிரஜைகள் சபையின் தலைவருமான வ.கமலதாஸ், அவர்களும், செயலாளராக சந்திவெளிக்கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் தலைவர் வ.ரமேஸ்ஆனந்தன் அவர்களும், உப செயலாளராக அன்பு இதயம் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முகமது புகாரி சித்திசபீக்கா அவர்களும், பொருளாளராக மீசான் சிறிலங்கா அமைப்பின் எம்.எம்.எம். நளீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
பின்னர் மாவாட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதிநிதிகளை உள்ளடங்கிய நிர்வாகசபை பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டதுடன்,; அமைப்பில் உள்ள நிறுவனங்களின் ஓழுக்கம் தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பதற்குயாப்பின் திருத்தத்திற்கு அமைய ஆலோசனைக்குழுவும் இதன்போது அமைக்கப்பட்டது.
பின்னர் அமைப்பின் புதிய தலைவி திருமதி. சோமாவதி-சிவசுப்பிரமணியம் அவர்கள் கருத்து தெரிவிக்குகையில்
தற்போது பெண்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுள்ளதனால் அரச அதிபருடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் சுமுகமான உறவை பேணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இருப்பதாகவும்,
சர்வதேச நிறுவனங்கள் நேரடியாகவே உள்ளுர் அமைப்புக்களுடன் பங்கின்றி கிராமங்களில் நேரடியாக தொழில்படுவதால் உள்ளுர் நலன்கள் பாதிக்கப்படுகின்றன அதேவேளை ஒரேநேரத்தில் பல நிறுவனங்கள் உதவி வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் சரியான முறையில் சென்றடைவதில்லை எனவும் சுட்டிக்காட்எய அவர்,
எமதுஇவ்வமைப்பைப் பொறுத்தவரையில் ஓழுக்கக் கோவையை நியமமாக பின்பற்ற வேண்டும் அவை பின்பற்றாத நிலையில் பிரயோசனமற்ற முறையில் செலவுகளும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அவற்றை எதிர்காலத்தில் திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இணைய அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உப தலைவருமான வி.கமலதாஸ் கருத்து தெரிவிக்குகையில்
கடந்த காலங்களில் நான்தலைவராக இருந்த வேளையில் எம்மோடு இணைந்து செயற்பட்ட அமைப்புக்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்றி கூறுவதுடன், எதிர்வரும் காலங்களில் மாதாந்தக் கூட்டங்கள் நடாத்துவதற்கு நிதியுதவி வழங்குவதற்கு மனிதநேயங்களின் ஒன்றியம் முன்வந்துள்ளதாகவும், அத்துடன் புதிய நிர்வாகசபைக் குழுவினர்களுக்குவாழ்த்து கூறுவதுடன், எமது புதிய தலைவி துணிச்சல் தைரியம் உள்ளவர் சவால்களுக்கு முகம் கொடுத்து வேலைசெய்பவர் இன்றையகாலகட்டத்தில்; பெண்கள் உயர் பதவிவகிக்கின்றனர் குறிப்பாக எமதுமாவட்டத்தின் அரசாங்க அதிபரைகுறிப்பிட்டுக் கூறலாம் அதேபோல் பெண்களுக்கு இடம்பெறும் பிரச்சனைகளுக்கு இலகுவாகமுகம் கொடுத்து தீர்க்க வேண்டும்.
எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் பாலியல் துஸ்பிரயோகம் அதிகதித்துக் கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் பெண்கள் சமூதாயசீர்கேடுகள் தொடர்பாகவும், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் முகமாக இவ்வருடத்திற்கான தலைவியாக திருமதி.சோமாவதி-சிவசுப்பிரமணியம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இக்கூட்டத்தின்போது பின்ரும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன
கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான அச்சுஊடகம் உருவாக்கப்பட வேண்டும்.
அங்கத்துவம் வகிக்கும் அமைப்புக்கள் 54 இல் பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் விரைவில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அமைப்புக்களுக்குரிய ஒழுக்கக் கோவைகள் தயாரிக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவைசரியான முறையில் பின்பற்றப்பட வேண்டும். போன்ற  மூன்று தீர்மானங்கள் சபையினரால் ஏகமனதாக எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: