21 Mar 2014

மாற்றங்களுக்கான கற்கை நெறி

SHARE
 (கஜன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களுக்கு மாற்றங்களுக்கான கற்கைநெறியும், அபிவிருத்தி பற்றிய எண்ணக்கருவும். தனிநபர் அபிவிருத்தியும், எனும் தலைப்பின் கீழ் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது.
பட்டிப்பளை வேள்ட் விசன் பிராந்திய அபிவிருத்தித் திட்ட அமைப்பின் ஏற்பாட்டில் அவூஸ்ரேலிய வேள்ட் விசன் அமைப்பின் நிதியுதவியுடன் கீழ் அமைப்பின் திட்டமுகாமையாளர் எஸ்.அனுராஜ்; அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு-தன்னமுனை மியாமி பயிற்சி நிலையத்தில் கடந்த 13 அன்று ஆரம்பிக்கப்பட்ட இச்செயலமர்வு நேற்றுடன் திங்கட் கிமையுடன் (17) நிறைவடைந்தது.
இச்செயலமர்வில் பிரதேசசெயலகத்தின் கடமைபுரிகின்ற உத்தியோகத்தர்கள் 30 பேர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மாற்றங்கள் செய்ய வேண்டிய துறைகள் மற்றும் மாற்றம் என்றால் என்ன எனஅறிமுகம் செய்யப்பட்டதுடன் அவைதொடர்பான விளக்கங்களும் வளங்கப்பட்டன.
மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய துறைகளின் அடிப்படையில் வறுமைக்கான முன்னெடுப்புகள், பிரச்சினைகளுக்குரிய மூல காரணங்கள், மாற்றங்களின் வகைகள், தலைமைத்துவம், மற்றும் மனஎழுச்சிக்கான தூண்டுதல், சேவைகளின் வகைகள், அபிவிருத்தியில் மாற்றங்கள், விடுதலையில் மாற்றம்பேன்றன தொடர்பாக விபரிக்கப்பட்டதுடன் இவை சம்மந்தமாக கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
மாற்றங்கள் செயற்பாட்டு நிலையிலான மாற்றங்கள், கட்டமைப்பு நிலையிலான மாற்றங்கள் என இருவகையாகபிரித்து அதில் முறண்பாடற்ற முறண்பாடுள்ள மாதிரிகள் என வகைபடுத்தி ஆராயப்பட வேண்டும் அதன்படி நலன்புரி, அபிவிருத்தி, விடுதலை, நிலைபேரான அல்லது மாற்றங்களுக்கான அபிவிருத்தி, சமஉரிமைகள், சமவாய்ப்புக்கள், போன்ற விடயங்கள் தொடர்பாக செயற்குழுக்களாக பிரிந்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய துறைகள் தொடர்பாக திட்ட இணைப்பாளர் கே.சபேசன் அவர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன் பின்னர் இம்மாற்றங்கள் ஏற்படுவதற்கான மூல காரணங்கள் தொடர்பாகவும், அதற்குரிய தீர்வுகள் பற்றியும், அமைப்பின் திட்ட முகாமையாளர் எஸ்.அனுராஜ் அவர்களினால் விளக்கம் கொடுக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் அரச உத்தயோகஸ்தர்களுக்கு  எதிர்காலத்திலும் நடாத்தப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: