21 Mar 2014

லெடர் ஒப் கோப் அமைப்பின் ஏற்பாட்டிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு.

SHARE

 (கஜன்)


சர்வதே சமகளிர் தினத்தை யொட்டி மட்டக்களப்பு மாவட்டம் பூராக மகளிர் தின சிறப்பு நிகழ்வுகளும் நடைபவணிகளும் கௌரவிப்புக்களும் நடைபெறுகின்றன. அந்த வகையில் லெடர் ஒவ் கோப் (டுயனனநச ழக ர்ழிந) என அழைக்கப்படுகின்ற அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் கிராம மட்டத்திலான அமைக்கப்பட்டுள்ள “நட்சத்திரா மகளிர்” கொத்தணி அமைப்பின் 2வது ஆண்டு நிறைவுவிழாவும் நேற்று திங்கட் கிழமை (17) தேவபுரம் மட்டக்களப்பு-முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள மேற்படி அமைப்பின் சமூக ஒருங்கிணைப்பு நிலையத்தில் நிறுவனத்தின் நட்சத்திர மகளிர் அமைப்பின் தலைவி திருமதி. ஜே.லோசினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக லெடர் ஒவ் கோப் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முகாமையாளர் திருமதி. ரஞ்சினி-மதிதரன், திட்ட இணைப்பாளர்களான ஏ.ரூபன், கிருஸ்ரினா மற்றும் பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏஸ்.சிற்றம்பலம், தேவபுரகிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர், ஏஸ்.தம்பியப்பா கிராம மாதர் சங்கத்தின் உறுப்பினர்களும் கிராம மக்களும் அடங்கலாக இந்நிகழ்வில் சமார் 80க்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெண்களின் அபிவருத்தி செயற்பாடுகள் தொடர்பாக மகளிர் தின சிறப்புரையை இதன்போத மேற்படி அமைப்பின் முகாமையாளர் திருமதி. ரஞ்சினி-மதிதரன் அவர்கள் கருத்துக்கள் தெரிவித்தார். 

மேலும் இந்நிகழ்வில் பெண்களுக்கான முட்டியுடைத்தல், யானைக்கு கண் வைத்தல், போத்தலில் வளையம் போடுதல், மெதுவாக துவிச்சக்கரவண்டி ஓடுதல் மற்றும் இன்னோரன்ன சமூக மட்ட விளையாட்டுப் போட்டிகளும் இதன்போத நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப் பட்டமையும் குறிப்பிடத் தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: