(கமல்)
மட்டக்களப்பு-களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் “ஆவியா” என்ற குறுந் திரைப்பட இறுவட்டு வெளியீட்டு விழா சனிக்கிழமை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் சே.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அர்கள் கலந்து பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுவெட்டினை வெளியீட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், மட்டக்களப்பு கச்சேரயின் பிரதம கணக்காளர் க.நேசராசா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், மற்றும் கல்வி அதிகாரிகள் கிராம மட்ட அமைப்புக்ளின் பிரதிநிதிகள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்குறும் படத்தின் தலைமை உரையினை சே.அருள்ராஜ் அவர்களும், விமர்சன உரையினை என்.கௌசன் அவர்களும் நிகழ்த்தினர்.
இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு, இப்படத்தில் நடித்திருக்கும் கலைஞர்களுக்கு களுதாவளை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஞாபகச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

0 Comments:
Post a Comment