21 Mar 2014

தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டுஇ டெங்கு தொடர்பான அறிவூட்டல்

SHARE

 (சசி)


தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டுஇ களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி மற்றும் எருவில் கிராம மக்களுக்கு பாடசாலை மாணவர்கள் மூலமாக டெங்கு தொடர்பான அறிவூட்டல் மேற்கொள்ளப்பட்டது.

இச்செயற்பாட்டில் மட்.களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் மட். களுவாஞ்சிக்குடி விநாயகர் வித்தியாலயம் மற்றும் மட்.எருவில் கண்ணகி வித்தியாலயம் என்பவற்றிலிருந்து சுமார் இருநூறுக்கு மேற்பட்ட சுகாதாரக்கழக மாணவர்கள் வீடுவீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாகவும்இ நுளம்புக் பெருக்கக் கட்டுப்பாடு தொடர்பாகவும் மக்களுக்கு அறிவூட்டினர்.

இதன் போது 848 வீடுகளுக்கு மாணவர்கள் சென்று விழிப்பூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அவ் வீடுகளில் சிலவற்றில் டெங்கு நுளம்பு பெருக்கமுள்ள இடங்களையும் கண்டுபிடித்து பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உதவியுள்ளனர். 

இந் நிகழ்ச்சித் திட்டத்தை களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் சி.யோகேஸ்வரன் திட்டமிட்டுச் செயற்படுத்தியுள்ளார். இந்நிகழ்விற்கு வித்தியாலய அதிபர்கள்கள்இ மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களான கு.குபேரன் வே.கணேசன் கே.இளங்கோவன்இ வே.வேணிதரன் சி.சிவசுதன் ஆகியோர் ஒத்துழைப்பு நடைபெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்..
SHARE

Author: verified_user

0 Comments: