1 Mar 2014

மட்டு:வெல்லாவெளியில் யானைகள் அட்டகாசம்.

SHARE
(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தினுள் நேற்று இரவு (27) புகுந்த காட்டுயானைக்கூடம் ஒன்று அப்பகுதியில் துவம்சம் செய்துள்ளது.  

நேற்று இரவு 11 மணியளவில் 4 யானைகள் கூட்டமாக இக்கிராமத்தினுள் புகுந்ததினால் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டதாக அக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டம் பிரதேச செயலக வீதியில் உள்ள வீடு ஒன்றினை முற்றாக உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அந்த வீட்டியிலிருந்த சொத்துக்கும் யானைகளினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி கிராம சேவை உத்தியோகத்தர் க.இராகுலன் தெரிவித்தார்.

நேற்று இரவு இவ்வீட்டு உரிமையாளர்கள்  சிவராத்திரி பூஜை நிகழ்வுக்கு ஆலயத்திற்குச் சென்றிருந்தனர் வீட்டில் யாருமற்ற நிலையில் யானைகள் இவ்வீட்டினை உடைத்து சேதப் படுத்தியுள்ளதாகவும், இதனால் 25 நெல்மூடைகளை சேதப்படுத்தியும், உறுஞ்சிக்குடித்து உள்ளதாகவும், உடைக்கப்பட்ட வீடு மற்றும் தளபாடங்கள் உபட்ட மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான தமது சொத்துக்கள் சேதமாக்கப் பட்டுள்ளதாகவும், குறித்த வீட்டியின் உரிமையாளரான குமரப்போடி-லோகநாதன் தெரிவித்தார்.

நேற்றயதினம் சிவந்தாத்திரி பூஜைகள் நடைபெறவில்லையாயின் தாம் வளக்கம்போல் இவ்வீட்டிலேயே இருந்திருப்போம் ஆனால் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவத்தார்.

இந்நிலையில் கிராம மக்கள் ஒன்று கூடி தீப்பந்தம் ஏந்தியும், பட்டாசு வெடி கொடுத்தியும், கூக்குரலிட்டும், யானைக்கூட்டத்தினை அக்கிராமத்தலிருந்து வெளியேற்றியதாக அக்கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு யானைகள் வெளிNறும்போது தென்னை மரம் உட்பட ஏனைய செடிகளுக்கும் சேதம் விளைவித்துச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.














SHARE

Author: verified_user

0 Comments: