வரதன்)
இந்துக்களின் விஷேட விரதங்களின் ஒன்றான மகா சிவராத்திரி விரத பூஜை நிகழ்வு கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு நான்கு சாமப் பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
ஆலயப் பிரதமகுரு ஸ்ரீ ரங்க வரதராஜ சிவாச்சாரியர் தலைமையில் கிரியைகள், யாவும் இடம்பெற்றன.
இதன்போது சிவலிங்க பெருமானுக்கு அபிஷேகம் அர்ச்சனை தீபாராதனை தேவார பாராயணம் என்பன இடம்பெற்றன. இப்பூஜை நிகழ்வுகளில் பெருமளவிலான பக்த அடியார்கள் விரதமிருந்து கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment