(வரதன்)
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இரவு வேளைகளில் அதிகளவு கால் நடைகள் உறங்குவதனால் போக்குவரத்துச் செய்யும் பிரயாணிகள் பலத்த அசௌகரியங்களை எதிர் கொண்டு வருதாக தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள் பிரதான வீதியின் நடுவில் உறங்குவதனாலும் அவ்வப்பேது வீதியினை குறுக்கீடு செய்வதனாலும் வீதி விபத்துக்கள் அதிகளவு இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு–கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி, பதுக்குடியிருப்பு கிராங்குளம், களுவாஞ்சிகுடி போன்ற பகுதிகளில் அதிகளவு மாடுகள் பிரதான வீதியின் நடுவே இரவு வேளைகளில் உறங்கி வருகின்றன.
இப்பகுதியில் வீதிவிளக்குகள் இல்லாமல் இருப்பதனாலும் இரவு வேளைகளில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் பலத்த இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இப்பிரதேசங்களில் தெரு நாய்களின் நடமாட்மும் அதிகளவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பிரயாணிகளின் நலன் கருதி கால்நடைகள் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment