(வரதன்)
மட்டு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களான கரடியனாறு வாகரை போன்ற வைத்தியசாலைகளுக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய அம்புலன்ஸ்
வண்டிகள் சுகாதார அமைச்சரினால் கையளிக்கும் நிகழ்வு மட் பிராந்திய சுகாதாரப் பணிமனையில் கிழக்கு மாகாணச்சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எஸ். முருகானந்தம் தலைமையில் கடந்த 18 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைத்திய அதிகாரிகளிடம் அம்புலன்ஸ் வண்டிகளை ழங்கி வைத்தார். இதில் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதே வேளைஒட்சிசன் மீள்பிறப்பாக்கிகளை வாழைச்சேனைஇ களுவாஞ்சிகுடிஇ ஏறவூர்இ காத்தான்குடி ஆகிய வைத்திய சாலைகளுக்கும்இ ஈ.சி.ஜி.இயந்திரம் மற்றும் ஆஸ்மா நோயாளர்களுக்கான நேப்லோகா இயந்திரம் என்பன காத்தான்குடிஇ மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவுஇ செங்கலடிஇ சந்திவெளிஇ கரடியனாறுஇ ஆகிய வைத்தியசாலைகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment