21 Mar 2014

“ரணவிரு தினம்”

SHARE

 (சக்தி)

இலங்கை இராணுவத்திலிருந்து கடந்த காலங்களில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூரும் “ரணவிரு தினய” நிகழ்வு இன்று (21) வெள்ளிக் கிழமை காலை மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடியில் இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாமில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்கப்பு அம்பாறை மாவட்ட விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.சேனாதீர, மற்றும் விசேட அதிரடிப்படையினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மலர் சென்டு வைத்தும், நினைவு உரை நிகழ்த்தியும் நினைவு கூரப்பட்டது.

ரணவிரு தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் களுவாஞ்சிகுடி முதியோர் இல்லதிலுள்ள முதியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும், மண்டூர் ஸ்ரீ முருகன் அலயத்தில் விசேட பூஜையும், களுவாஞ்சிகுடி அதார வைத்தியசாலையில் சிரமதானமும்  இன்றயதினம் மேற்கொள்ளப் பட்டன.

இதேவேளை “ரணவிரு தினய” நிகழ்வு களுவாஞ்சிகுடி  பொலிஸ் திலையத்திலும் இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும். 











SHARE

Author: verified_user

0 Comments: