(துசாந்தன்)
வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக ஈரநில தினம் இன்று திங்கட் கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது. "ஈரநிலங்களும் விவசாயமும்இ வளர்ச்சிக்கான பங்காளிகள்" எனும் இவ் வருட தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் சபையின் நிலைய பொறுப்பாளர் கோகுலன் , பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட (ADP) முகாமையாளர். ஜி.ஜே.அனுராஜ்
பட்டிப்பளை பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் பட்டிப்பளை பிரதேச பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள்இ குடியேற்ற உத்தியோகத்தற்கள்இ பிரதேச காணி பிரிவு உத்தியோகத்தர்கள், வேள்ட்விஷன் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இதன்போது பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் அமைந்துள் தாழ் நிலங்களில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டதோடு கண்டல் தாவரங்களை பாதுகாப்பது தொடர்பாக விளக்கங்களும் வழங்கப்பட்டன.
உலக ஈரநில தினம் தொடர்பான இஸ்ரிக்கர்களும், "ஈரநிலங்களும் விவசாயமும்இ வளர்ச்சிக்கான பங்காளிகள்" எனும் வாசகம் பொறிக்கப்பட்ட தொப்பிகளும் மாவணர்களுக்கு இதன்போது அணிவிக்கபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment