27 Feb 2014

காட்டு யானைகளின் தாக்கங்களை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

SHARE
(சக்தி)

மக்களின் வாழ்விடம், பயிர்செய்கைப் பிரதேசங்களில் காட்டு யானைகளின் தாக்கங்களை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்கிழமை (25) மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேச செயலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் வி.முரளிதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராசா, கி.துரைராசசிங்கம், இ.பிரசன்னா, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மட்டக்களப்பு மாவட்ட வன விலங்கு இலாகா சுற்றுவட்ட அதிகாரி கே.ஜானக்க சாந்தகுமார, அதன் உதவி அதிகாரி ரி.ஜெகதீஸ், மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் மிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பாலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது போரதீவுப்பறு பிரதேச செயலகத்தினுள் வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவது தொர்பாக கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலின்போது போரதீவுப்பற்று பிரதேசத்தினுள் வரும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக மின்சார வேலிகளை யானைகள் ஊடுருவும் பியங்கல, நவகிரி, கச்சக்கொடி போன்ற எல்லைப் பிரதேசங்களில் அமைத்தல்.

காட்டு யானைகளை விரட்டும் வன விலங்கு இலாகா அலுவலகம் ஒன்றினை நவகிரிப்பிரிவில் அமைத்தல்.

தற்போது பிரதேசத்தினுள்; நிற்கின்ற காட்டு யானைகளை விரட்டுதல்.

கடந்த காலங்களில்  யானைகளினால் சேதமாக்கப்பட்ட வீடடுச்சேதம், பயிர்சேதம மற்றும் உயிரிழப்புக்கள் போன்றவற்றிற்கு நிவாரணம் வழங்கல்.

யானைகள் ஊடுருவும் பிரதேசங்களில் பனைமரங்கள் நட்டு இயற்கை வேலிகளை அமைத்தல்.

யானை வரும் வழியில் குடியிருப்பு மற்றும் பயிர் செய்கைகளை மேற்கொள்வதை தவிர்த்தல்.

பாதுகாப்பாக மக்களை இருக்குமாறு சிவில் பாதுகாப்புக்குழுக்களுடாக மக்களுக்கு அறிவூட்டுதல், 

எதிர் வரும் மர்ச் மாதம் 7 ஆம் திகதி இப்பிரதேசத்தினுள் நிற்கின்ற யானைகளை பொலிசார், வனவிலங்கு இலாகா அதிகாரிகள், சிவில் பாதுக்hப்பு குழுக்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து யானைகளை பிரதேசத்தினுள் இல்லாமல முற்றாக விரட்டுதல்

போன்ற தீர்மானங்கள் இக்கலந்துரையடலில் எடுக்கபட்ட.

இதன்போது யானைகளின் தொல்லைகளுக்கு உட்பட்டுவரும் மக்களின் இன்னல்கள் குறித்தும், மேற்படி தீர்மாணங்களை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் இதில் கலந்து கொண்டமக்கள் அதிகரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில்

யானைகளை விரட்டக்கூடிய மிருகமான கழுதையினை மன்னாரிலிருந்து கொணர்ந்து யானை வரும் பகுதிகளில் விடுதல்.

தனியாக பொதுமக்களும் மின்சார வேலிகள் அமைத்தல், பொதுமக்களும் வனவிலங்கு இலாகா பகுதியினருடன் தொடர்பு கொண்டு யானைவெடிகளை வாங்குதல், போன்ற அலோசனைகளும் இதன்போது முன்வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: