(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை தபாலகம் இன்று (23) இரவு இனந் தெரியாத நபர்களினால் உடைக்கப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை தபாலக வேலைகள் முடிவுற்று காரியலயத்தினை பூட்டிவிட்டுச் சென்றுள்ளதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகையால் காரியாலம் திறக்கப்படவில்லை எனவும் இன்று வழக்கம்போல் தாபாலகத்தின் முன் கதவினை (கேற்றினை) திறந்து உள்ளே நுளைந்தபோது தாபால் காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதனை அவதானித்ததாக களுதாவளை தபாலகத்தின் தபாலதிபர் தெரிவித்தார்.
பின்னர் இவ்விடயம் குறித்து களூவஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்ததனை அடுத்து பொலிசர் நேரடியாக வந்துபார் வையிட்டுள்ளதுடன், பொலிஸாரின் உதவியுடன் பாரியாலயத்தினுள்ளே பரிசோதித்தபோது பாதுகாப்பு வைப்புப் பெட்டகம் உடைக்கப்படவில்லை என அறிய முடிந்தது. எனத் தெரிவித்த அவர்
இருந்த போதிலும் காரியாலய மேசையிலிருந்த கோவைகள், ஆணவங்கள் என்பன கீழே விழுத்தப்பட்டுள்ளன. எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது நேற்று இரவு இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனவும் கொள்ளையடிக்கும் நோக்கில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும். அவர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் களுதாவளை தபாலகத்தின் தபாலத்திபர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இன்றயத்தினம் இத்தபாலகத்தின் சேவைகள் நடைபெறாமல் ஸ்த்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் இனந்தெரியாதவர்கள் தபாலயங்கள் மீது தாக்குதல் நடைத்தி வருவது வேதனைக்குதிய விடயம் எனவும் களுதாவளை தபாலயத்தின் உடைப்புச் சம்பத்துடன் இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 7 தபாற் காரியாலயங்கள் உடைக்கப் பட்டுள்ளதாகவும் இதுவரையில் 270000 ரூபா நிதி மொத்தமாக களவாடப் பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண நுண்ஆய்வு பரிசோதகர் எம்.சற்.எம்.பாறுக் தெரிவித்தார்
கிழக்கு மாகாணத்தில் மிக அண்மைக்காலத்தினுள் சவளக்கடை உபதபாலகம், மஞ்சந்தாடுவாய் உபதபாலகம், இறக்காமம் தபாலகம், கோட்டக்கல்லாறு தபாலகம், சாய்ந்தமருது தபாலகம், கல்லாறு தபாலகம், களுதாவளை தபாலகம், ஆகிய தபாலகங்களே இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு உடைக்கப்பட்டன.
இவற்றுள் 2 உபதபாலகங்களும் 5 தபாலகங்களும் அடங்குவதாக தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண நுண்ஆய்வு பரிசோதகர் எம்.சற்.எம்.பாறுக் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment