20 Feb 2014

பாதுகாப்பான சீரான போக்குவரத்திற்கான வீதிப் புணரமைப்பு

SHARE
 (துசாந்தன்)

பாதுகாப்பான சீரான போக்குவரத்திற்கான வீதிப் புணரமைப்பு செயற்பாட்டின் கீழ் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் காட்டு யானைகளின் தாக்கத்தினையும்இ அவற்றின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் வேள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையில் கிரமத்தின் பிரதான வீதியின் அருகாமையில் உள்ள பற்றைகளை அகற்றும் வேலைத்திட்டம் பிரதேச செயலாளரின் தலைமையில்  நேற்று (18) இடம்பெற்றது. 

இதன்போது பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று கிலோ மீற்றர் நீளம் கொண்ட கச்சக்கொடிச்சுவாமிமலை – கெவுளியாமடு பிரதான வீதியின் இருமருங்கிலுமிருந்த பற்றைக்காடுகள் அழிக்கப்பட்டு போக்குவரத்திற்காக மக்கள் பாவனைக்கு விடப்பட்டன.  

இந்நிகழ்வில் இதில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம்இ வன பாதுகாப்பு அதிகாரி கணேசமூர்த்திஇ சமுக சேவை உத்தியோகத்தர் க.கமலராஜன்இ பிரதேச அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் கு.கங்காதரன்இ வேள்ட்விஷன் திட்ட இணைப்பாளர் நிர்மிதன்இ கச்சக்கொடி பொருளதார உத்தியோகத்தர் கு.சேந்திரதாஷ் மற்றும் விவிசாய அமைப்பு பிரதிநிதிகள்இ பொது மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். 





SHARE

Author: verified_user

0 Comments: