(மௌசூம்)
“கிழக்கில் முதலீடு செய்யுங்கள்” எனும் வேலைத் திட்டம் திருகோணமலையில் ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட வேலைகளை கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆரம்பித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக மலேசிய நாட்டு முதலீட்டாளர்களான கலாநிதி முஹமட் தாவூத் பகார், சைய்ட் நிஸாம் சைய்ட் ஜலால்தீன், ராஷி பஹ்லவி அப்துல் அஸீஸ் ஆகியோர் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளனர்.
ஆவர்களின் இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம, முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்பும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டு முதலீடு செய்து இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இது ஒரு களமாக அமையுமென வேலைகளை கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பற்றியும் கிழக்கு மாகாணத்தின் இஸ்திர தன்மை மற்றும் வள வாய்ப்புகள் பற்றி முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் இதன்போது எடுத்துக் கூறியதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment