16 Feb 2014

சாரணர் இயக்கத்தின் தேசிய பிரதி பிரதம ஆணையாளர் சிறாஜ் சாலி நேற்று வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்புக்கு விஜயம்மேற்கொண்டுள்ளார்.

SHARE
 (கமல்)

சாரணர்  இயக்கத்தின் தேசிய பிரதி பிரதம ஆணையாளர் சிறாஜ் சாலி நேற்று வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்புக்கு விஜயம்மேற்கொண்டுள்ளார்.
இவர் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்திற்கு முன்பாகவுள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சாரணர் குழுக்களினால் இவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது சாரணர்; இயக்கத்தின் தேசிய மற்றுமொரு பிரதி பிரதம ஆணையாளர் கல்யான் பெரேராஇ வடக்கு கிழக்கு விசேட ஆணையாளர் எம்.முகீட் ஆகியோரும் விஜயம் செய்தனர்.
இவர்களை சாரணர் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் இ.பி.ஆனந்தராஜாஇ உதவி மாவட்ட ஆணையாளர்களான ஆர்.பாஸ்கர்இ ஏ.அலோசியஸ்இ ஐ.கிறிஸ்ட்டிஇ ஏ.புத்கரன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து வலயங்களிலுள்ள சாரணர் குழுக்களின் பிரதிநிதிகள் சாரணர் முறைப்படி வரவேற்றனர்.
இதையடுத்து தேசிய கொடி மற்றும் சாரணர் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.
இதன்போதுஇ மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் மட்டக்களப்பிலுள்ள சாரணர்களுக்கான கூட்டமொன்று நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன் மற்றும் சாரணர் இயக்கத்தின் தேசிய பிரதிபிரதம ஆணையாளர் சிறாஜ் சாலி உட்பட சாரணர் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த சாரணர்; இயக்கத்தின் தேசிய பிரதி பிரதம ஆணையாளர் சிறாஜ் சாலி சாரணர்கள் மத்தியில் சிறந்த கலாசாரமும்இ பன்பாடும் கட்டி வளர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: