16 Feb 2014

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வியில் மிகவும் கூடுதலான கவனம் செலுத்தி செயற்பட வேண்டும்

SHARE
  (கமல்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி பின்னோக்கி செல்கின்றது ஏனைய சமூகங்கள் போன்று கல்வியை போட்டிபோட்டு வளர்ப்பதற்கு எமது சமூகத்தினை சாந்த அனைவரும் பங்காளிகளாக மாற வேண்டு மென மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

களுதாவளை இராமகிஷ;ண வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருநாவுக்கரசு தலைமையில் கடந்த 13 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வியில் மிகவும் கூடுதலான கவனம் செலுத்தி செயற்பட வேண்டும். காரணம் பிள்ளைகள் பாடசாலையை விட பெற்றோர்களுடன் தான் கூடுதலான நேரத்தினை கழிக்கின்றனர் எனவே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்தால்தான் கல்வியினை கட்டியெழுப்பமுடியும்.

அன்பான மாணவர்களே எந்தவொரு நேரத்திலும் கற்பித்த ஆசிரியரை மறக்கக் கூடாது அவ்வாறு மறந்து செயற்பட்டால் உங்களது வாழ்க்கை நிற்சயமாக பின்னோக்கியே செல்லும். 

ஆசிரியர்கள் மனம்வைத்தால் மாத்திரமே எதிர்காலத்தில் நீங்கள்; தலைநிமிர்ந்து நிற்கமுடியும் என்பதனை மறந்து விடக்கூடாது. ஏற்றி வைக்கின்றவர்களை எவர் மறக்கின்றார்களோ அவர்கள் நிறற்சயம் இறக்கி வைக்கப்படுவார். 

எனவேதான் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து அவர்களை எக்காலத்திலும் மறக்காமல் செயற்படுவதனுடாக நீங்கள் வெற்றிபெறுவீர்கள் என்பதனை நான் உங்களுக்கு அறிவுரையாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

இக் களுதாவளை கிராமம் எதிர்காலத்தில் கல்வியில் வீறுநடைபோடும்  ஒரு பலமான கிராமமாக மாற்றமடையும். காரணம் களுதாவளை மகாவித்தியாலயம் தொழிநுட்ப பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது. 

அதே போன்று படுவான்கரை பிரதேசத்தினை மையப்படுத்தியதாக பழுகாம் கண்டுமணி மகா வித்தியாலயம் மாற்றப்பட்டுள்ளது.

பாட்டிருப்பு தொகுதியில் இரண்டு பாடசாலைகள் மாத்திரமே இச் சந்தர்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இவற்றினை சரியாக பயன்படுத்தி எமது பிரதேசத்தின் கல்வியை உயர்த்த அனைவரும் கை கோர்க்கவேண்டும் எனத் தெரிவித்தார்  

SHARE

Author: verified_user

0 Comments: