20 Jan 2014

சேவாலங்காஅமைப்பின் ஏற்பாட்டில் தலைமைத்துவப் பயிற்சி

SHARE
(சக்தி)

யுனிசெப் அமைப்பின் நிதியுதவியுடன் சேவாலங்கா அமைப்பின் அனுசரணையுடன் ஏறாவூர் மட்.றகுமானியா மகாவித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அமைப்பின் பிரதேசதிட்ட இணைப்பாளர் ஜெ.ரதீஸ் அவர்களின் தலைமையில் ஏறாவூர் பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அல்-றிழா இளைஞர் கழகத்தின் உருப்பினர்களுக்கு தலைமைத்துவம் மற்றும் வாழ்க்கைதிறன் தொடர்பான கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. நேற்று (19) இடம்பெற்றது.

ஏறாவ+ர் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் - றிழா இளைஞர் கழகத்தின் உருப்பினர்கள் சுமார் 50 பேர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் இளைஞர் சம்மேளனத்தின் ஏறாவூர் பிரதேச முன்னாள் தலைவர் ஏ.வாஜீத், ஏறாவூர் பிரதேசத்தி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம். சஜீர் என பலர் கலந்து கொண்டனர்.

சேவாலங்கா அமைப்பின் இவ்வருடத்திற்குரிய செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டதில் 6000 இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறான கருத்தரங்குகளுக்குள் உள்ளீர்க்கப்பட இருப்பதாகவும் இதன்மூலம்  இளையுர் யுவதிகளின் ஆளுமை மற்றும், தலைமைத்துவம் , விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு போன்றன விருத்தியடையும் என சேவாலங்கா அமைப்பின் பிரதேச திட்ட இணைப்பாளர் ஜெ.ரதீஸ் இதன்போது தெரிவித்தார். 






SHARE

Author: verified_user

0 Comments: