(ஏ.எல்.எம்.ஸினாஸ்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனையிலுள்ள ஊடகவியலார் ஏ.எல்.எம். ஸினாஸின் தாய் வீட்டில் கடந்த 16.01.2014 மாலை பாரியதாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த இந்தசம்பவத்துடன் தெடர்புடைய சகலரும் தற்போதுதலைமறைவாகியுள்ளனர்.
இந்தசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 16.01.2014 ம் திகதி மாலை 4.30 மணியளவில் மதுபோதையுடன் கையில் கூரியகத்தியுன் கொலை செய்ய வந்துள்ளேன்! எனக் கூறிக் கொண்டு 45 வயது நிரம்பிய மருதமுனையினைச் சேர்ந்த லத்திப் என்பவர் மருதமுனை அல்-மினன் வீதியிலுள்ள ஊடகவியலாளர் ஏ.எம்.எம்.ஸினாஸின் தாயியாரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்துள்ளார்.
குறித்த வீட்டில் ஆண்கள் யாருமற்ற நேரத்தில் புகுந்தவர், வீட்டிலிருந்த ஊடகவியலாளர் ஏ.எம்.எம்.ஸினாஸின் (தாயார்) ஏ.சி.சுபைதா என்பவரைகக் த்தியால் குத்தமுயற்சித்தபோது அயலவர் ஒருவர் தனது உயிரையும் பார்க்காது வீட்டுக்குள் பாய்ந்து வீட்டிலிருந்த குறித்த பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.
இதேவேளை அயலவர்களின் உதவியோடு பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபரை வீட்டு அறை ஒன்றினுள் அடைக்கப்பட்டபோது அவரது உறவினர்கள் மற்றும் 19 பேர் குழுஒன்றினால் மதுபோதையோடு வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு உட்புகுந்து அங்கிருந்தவர்களையும் வீட்டின் உடமைகளையும் உடைத்து சிக்கு நூறாக்கியதோடு பெறுமதிமிக்க வீட்டு பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதேவேளை சுபைதாஎன்பவரின் மகன் சியா ஹலால் சிக்கன் உரிமையாளருக்கு முன்பு அறிமுகமில்லாத தொலைபேசி இலக்கத்திலிருந்து உடனடியாக உங்களது வீட்டிற்கு வருமாறு அழைப்பொன்றும் வந்துள்ளது.
சுபைதாஎன்பவரின் மகன் சியா ஹலால் சிக்கன் உரிமையாளர் தனது வியாபார ஸத்தலத்திலிருந்து தனது வீட்டிற்கு வரும்போது மதுபோதையில் நின்ற சிலர் அவரை வழிமறித்து அவரது வலது கையினை வெட்டி துண்டாடியுள்ளதோடு காலிலும் கத்தியால் குத்தியுள்ளனர்.
தற்போது இச்சம்பவத்தில் பாதிக்கப்ட்ட சியா ஹலால் சிக்கன் உரிமையாளர் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப் பட்டுவருகிறது.
இந்த விடயம் தொடர்பாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸின் தெரிவித்தார்.
இதுவரை இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தெடர்புடைய ஏனையோர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment