25 Jan 2014

போரதீவுப்பற்று பிரதேசத்தில் மாத்திரம் இவ்வருடத்தில் 70 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

SHARE
(தயா)

போரதீவுப்பற்று பிரதேசத்தில் மாத்திரம் இவ்வருடத்தில் 70 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்நிதியில் இப்பிரதேசத்திலுள்ள 43 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டம் என்ற அடிப்படையில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக. மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தின் இவ்வருடத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (24) வெல்லாவெளி மட்.கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.  

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், மீழ் குடியேற்றப் பிரதியமைச்சருமான விநாயகமூர்தி முரளிதரன், மற்றும் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகஸ்தர்கள், என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இவ்வருத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், தொடர்பாக ஆராயப்பட்டன.
இப்பிரதேச அபிவிருத்தி தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்.

இப்பிரதேசத்தில் திவிநெகும திட்டத்தின் கீழ் 67 லெட்சம் ரூபாவும். சிறிய வீதிகள், புணரமைப்பு மற்றும் சிறிய பாலங்கள் ( மதகுகள்) புணரமைப்புக்கென 99 லெட்சம் ரூபாவும், இப்பிரதேச கல்வி அபிவிருத்திக்கென 20 லெட்சம் ரூபாவும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதனைவிட மீழ்குடியேற்றப் பிரதியமைச்சருக்கு இப்பிரதேச அபிவிருத்திக்காக வேண்டி மேலதிகமாக கிடைக்கப் பெற்றுள்ள 300 லெட்சம் ரூபா நிதியினை இப்பிரதேச கிராமங்களிலுள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு வழங்கப் படவுள்ளதாக. அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, வவுணதீவு பிரதேசங்களிலும் இவ்வருடத்தில் முன்னெடுக்கப் பட்டவுள்ள அபிவிருத்திகள் தொடர்பான கூட்டங்களும் இன்று மேற்படி பிரதியமைச்சரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.   







SHARE

Author: verified_user

0 Comments: