25 Jan 2014

“மாட்ட திவி நெகும தைப் பொங்கல் விழா”

SHARE
(சக்தி,வரதன்)  
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி அதிகார சபையும் இணைந்து நடாத்திய “மாட்ட திவி நெகும தைப் பொங்கல் விழா” இன்று (24) வெள்ளிக்கிழமை காலை வெல்லாவெளி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி-முரழிதரன், சமூர்தி அபிவிருத்தி மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பி.குணரெத்தினம், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீர்தா-பிரபாகரன், மற்றும் , அரச உயர் அதிகாரிகள் கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வெல்லாவெளி மாரியம்மன் ஆலய முன்றலில் பால் பொங்க பொங்கல் பொங்கி ஆலயத்தில விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் விவசாயத் தொழிலினைப் பிரதிபலிக்கக் கூடியதாக கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.






















SHARE

Author: verified_user

0 Comments: