5 Oct 2012

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலய பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம்

SHARE

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலய பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 18.10.2012 அன்று முற்பகல் 09.05 மணிமுதல் 10.15 மணிவரையுள்ள சுபநேரத்தில் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையாருக்கும் ஏனைய பரிபார மூர்த்திகளுக்கும் பாலாஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 17.10.2012 அன்று காலையில் விநாயகர் வழிபாடும் கிரியாரம்பமும் அனுக்ஞை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், திருவருட் பிரசாதம் வழங்கள் என்பன இடம்பெற்று 
மறுநாள் காலை (18.10.2012) ஆறு மணிமுதல் விநாயக வழிபாடு, யாகபூசை, ஹோமம், மஹா பூர்ணாகுதி, தானாதிகள் என்பன நடைபெற்று அன்றயதினம் முற்பகல் 09.05 மணிமுதல் 10.15 மணிவரையுள்ள சுபநேரத்தில் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையாருக்கும் ஏனைய பரிபார மூர்த்திகளுக்கும் பாலாஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: