28 Sept 2012

மட்டக்களப்பு - கிரான் பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்று சாதனை.

SHARE


வரலாற்றுச் சாhதனை படைத்திருக்கும் மட்டக்களப்பு - கிரான் பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 64 வருடங்கள் கடந்த நிலையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் இப்பாடசாலை மாணவி க.குவேந்தினி 147 புள்ளிகளைப் பெற்று இவ்வருடம் முதன்முறையாக இப்பாடசாலை வரலாற்றில் அக்கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கிரான் பூலாக்காடு என்னும் கிராமத்தை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் கொண்ட கனகசூரியம் தமயந்தி ஆகியோரின் மகளாகிய குவேந்தினி என்பவர் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரி;ன் தந்தையார் கூலித் தொழிலாளி ஆவார்.

இவரின் இக்கிராமமானது மிகவும் கஷ்ரப்பட்ட பிரதேசமாக காணப்படுகின்றது. இங்குபோக்குவரத்து, மின்சார வசதிகளோ இல்லை. இவ்வாறான கஷ்டநிலையும் தனது கல்வியைமிகவும் முன்னேற்றத்துடன் மேற்கொண்டு வந்தார்.

இவர் கல்வி கற்ற பாடசாலையானது கிரான் பிரதான வீதியில் இருந்து சுமார் 12 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மிகவும் அதிகஷ்ரப் பிரதேச பாடசாலையாகும்.

கிரான் பூலாக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கஜேந்திரன் ஜதுசனன் 106புள்ளிகளையும், ஜெயசீலன் ஜெயப்பிரியா 110 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இம்;மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு கல்வி கற்பித்த ஆசிரியர் க.சிவப்பிரகாசம் அவர்களுக்கும், இம்மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் எமது பாடசாலை ஆசிரியர்கள் சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் பாராட்டு தெரிவிப்பதாக பாடசாலைஅ திபர் எஸ்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.





SHARE

Author: verified_user

1 Comments: