5 Aug 2022

ஜனாதிபதியிடம் தேசிய காங்கிரஸ் பல முன்மொழிவுகள் முன்வைப்பு.

SHARE

(நூருல் ஹுதா உமர்)

ஜனாதிபதியிடம் தேசிய காங்கிரஸ் பல முன்மொழிவுகள் முன்வைப்பு.

தேசிய காங்கிரஸ் தலைவரின் ஜனாதிபதியுடனான சந்திப்பு நாட்டின் சமூக பொருளாதார ஸ்தீரத்தன்மையை நிறுவும் நோக்கில் சர்வகட்சிகள் அடங்கிய தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை உருவாக்குவற்கான முன்னெடுப்பில் செயற்பட்டுவரும்  நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறித்த

செயற்திட்டத்திற்கு ஆதரவுகோரி தேசிய  காங்கிரஸ் தலைவருக்கும் உத்தியாேகபூர்வமாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் கடந்த 02.08.2022 அன்று  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்கின்ற வகையில் குறித்த தேசிய செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேசிய காங்கிரஸ் தலைவருடன் நேரடி சந்திப்பினையும் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜனாதிபதியின் தேசிய சர்வகட்சி முன்னெடுப்பு அழைப்பிற்கான பதிலை கடிதம் முலம்  ஜனாதிபதியிடம் கையளித்த தேசிய காங்கிரஸ் தலைவர், நாட்டில் தற்போது நிலவும் சமூக பொருளாதார நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்கான சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குதற்கு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.இச் சந்திப்பின்போது தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ. உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நாடு எதிர் கொள்கின்ற சமகாலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு சகல இனங்களுக்குமான சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பினை
பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டிய தருணம் இது என்பதன் அவசியத்தை தேசியகாங்கிரஸ் இச்சந்திப்பின் போது வலியுறுத்தியது. மேலும் 19வது திருத்தச்சட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்வதைவிட காலத்தின் தேவை கருதி இருபதாவது திருத்தத்தில் அவசியமான திருத்தங்களை  மாத்திரம் கொண்டு
வருவதன் மூலம் தீர்வு காண்பதோடு புதிய அரசியலமைப்பினை அறிமுகம் செய்வதன்மூலம் நிரந்தர தீர்வினை காண்பதே அவசியமானது என்பதை தேசியகாங்கிரஸ் தலைவர் இச்சந்திப்பின்போது வலியுறுத்தனார்.

மேலும் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை பூர்த்தி செய்யும்வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறைமையினை முற்றாக நீக்குவது என்பது, நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு மற்றும் சகல இனங்களுக்குமான ஜனநாயக காப்பீடு போன்ற விடயங்களை கருத்திற்கொள்கையில் தற்போது உசிதமானதல்ல என்பதையும்  தேசிய காங்கிரஸ் தலைவர் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தெளிவாகச் சுட்டிக்காட்டிருந்தார். மேலும் நாட்டின் சுதேச வளங்களை முறையாகப் பயன்படுத்தி போஷாக்குணவு உட்பட பால் உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் எரிபொருள் வினியோகம்  போன்ற நீண்டகால பிரச்சினை களுக்கும் முறையான நிரந்தர திட்டங்களை அறிமுகம்  செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் அதற்கான பொறிமுறை பற்றியும் தேசிய காங்கிரஸ் தரப்பு ஜனாதிபதி உடனான இச்சந்திப்பில் வலியுறுத்தயமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே பாராளுமன்றில் எதிர்க்ட்சிகள் 21வது திருத்தச்சட்டத்தினை சமர்ப்பித்துள்ள நிலையில்,
அரசாங்கம் கொண்டுவர உத்தசேித்துள்ள  திருத்தசட்டத்திற்குரிய மாற்று திருத்த முன்மொழிவுகளை  தேசிய காங்கிரஸ் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது என்பதையும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி தேசிய காங்கிரஸின் குறித்த முன் மொழிவுகளை
பரிசீலிப்பதாகவும் எடுத்துரைத்தார்.  தேசிய காங்கிரஸ் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள திருத்த முன்மாெழிவுகள் புதிய அரசியலமைப்பு உருவாகும்வரை நிறைவேற்று அதிகார முறைமையினை தக்க வைப்பதற்கும், சகல இன மக்களுக்குமான முறையான வளப்பகிர்வு முறைமையினை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக உறுதி செய்வதற்கும் உரிய திருத்தங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


 

SHARE

Author: verified_user

0 Comments: