மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தின் 178 வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு.
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள்
ஆலயத்தின் 178 வது வருடாந்த திருவிழாவானது கடந்த 22.07.2022 திகதி வெள்ளிக்கிழமை மாலை
5.00 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி சீ.வி.அன்னதாஸ் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகியதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நவநாட்களில் மாலை 5.00 மணிக்கு திருச் செபமாலையும்
அதனை தொடர்ந்து புனித அன்னம்மாளின் மன்றாட்டும் திருப்பலியும் இடம்பெற்றதுடன், கடந்த
26.07.2022 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு ஆயரின் தலைமையில் திவ்விய நற்கருணை,
உறுதிபூசுதல் திருவருட்சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
30.07.2022 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து 6.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்று தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு புனித அன்னம்மாளின் திருச்சுரூப பவனியும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த (31) திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் திருவிழா கூட்டுத்திருப்பலியின் நிறைவில் அன்னையின் ஆசீரைத் தொடர்ந்து ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
0 Comments:
Post a Comment