14 Feb 2021

மட்டக்களப்பு மாநகர சபையினை சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்பாடு.

SHARE


மட்டக்களப்பு மாநகர சபையினை சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்கும் செயற்பாடு.

மட்டக்களப்பு மாநகர சபையினை சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்கும் வகையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் ஒருகட்டமாக  மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வதியும் இளைஞர்களும், சிறுவர்களும் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக காணொளி மூலம் கருத்துத்து தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாதக மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் தெரிவித்தார்.

நவீன தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக காணொளிக் கலந்துரையாடல்களை மேம்படுத்தும் நோக்கில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் செர்றி நிறுவனத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபைக்கென 55 அங்குல ஸ்மார்ட் தொலைக்காட்சியொன்று சனிக்கிழமை(13)  மாநகர ஆணையாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது. இதுதொடர்பில் ஆணையாளர் கருத்துத் தெரிவிக்கையில்.

மட்டக்களப்பு மாநகர சபையினை சிறுவர்நேய மாநகரமாக மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனையில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் செர்றி நிறுவனத்தின் பங்களிப்போடு சிறுவர்களுக்கு புத்துணர்ச்சியினையும், புத்தாக்கத்தையும் தூண்டடிக் கூடிய வகையில் நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய விளையாட்டு வசதிகள் லொயிட்ஸ் பார்க் சிறுவர் பூங்கா அமைக்கப்படுவருகின்றது.

அதுமாத்திரமின்றி  சிறுவர்களைக் கவரும் வகையில் நகர அழகுபடுத்தல் தொடர்பில்  பல்வேறு செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவருகின்றன, எதிர்காலத்தில் சிறுவர்களுக்குரிய வசதிகளை மேம்படுத்தி அவர்களுக்குரிய, மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளையும் இச்சிறுவர்நேய மாநகரக் கட்டமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் கொவிட் 19 காலத்தில் காணொளியின் ஊடான தொடர்பாடலை, விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மாநகர சபைப் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள், சிறுவர்கள் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பையும் இதன் ஊடாக பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகஸ்த்தர்கள், செரி நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் எபநேச் தர்ஷன், மாநகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களான நித்தியானந்தன், திருமதி ஜெயகௌரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: