கிழக்கு மாகாண பிரதி
பொலிஸ்மா அதிபர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றல்.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி
ஏற்றும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை(14) முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பிலுள்ள
14 பொலிஸ் நிலைய பொறுப்பதிகரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி
ஏற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்தியர் அதிகாரி அலுவலகத்தில்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாதுகாப்பு படையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி
எற்றும் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிசாருக்கு தடுப்பூசி
ஏற்றும் நடவடிக்கை கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டு பகுதி பகுதியாக
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் இதன்போது கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும்
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகள்
கலந்து கொண்டு தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment