12 Nov 2025

20 இற்கு மேற்பட்ட நாடுகள் எமது போராட்டத்தை அழித்திருந்தார்கள். ஆனால் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க தமிழர்களாகிய எமக்கு இருப்பது கல்வி போராட்டம் மாத்திரமே

SHARE

20 இற்கு மேற்பட்ட நாடுகள் எமது போராட்டத்தை அழித்திருந்தார்கள். ஆனால் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க தமிழர்களாகிய எமக்கு இருப்பது கல்வி போராட்டம் மாத்திரமே

20 இற்கு மேற்பட்ட நாடுகள் எமது போராட்டத்தை அழித்திருந்தார்கள். ஆனால் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க தமிழர்களாகிய எமக்கு இருப்பது கல்வி போராட்டம் அதற்காக நான் முன்னிறு செயற்பட்டு வருகின்றேன் என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.  

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொநூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்ப்பிழமை(11.11.2025) மாலை நடைபெற்றது. 

பொது நூலக  வாசகர் வட்டத்தின் தலைவர் புருஷோத்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதேச சபை செயலாளர் சு.சுபராஜ், கோட்டைக்கல்லாறு வட்டார பிரதேச சபை உறுப்பினர், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் பிரதி நிதிகள், பொது நிர்வாக அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தேசிய வாசிப்பு மாதத்தைத்மை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டதோடு, கலை நிகழ்வுகளும், ஆற்றுகை செய்யப்பட்டன. 

இதன்போது மேலும் கருத்தத் தெரிவித்தா தவிசாளர்

பிரதேச சபை என்றால் கழிவுகளை அகற்றுவது, மின் விளக்குகளைப் பொருத்துவது, கிராமிய வீதிகரைளப் புனரமைப்பு போன்வைகள்தான் என சிலர் நினைக்கின்றார்கள். மாறாக எமது பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள மாணவர்களின் சிறந்த கல்வி வழங்குவதற்காக நாம் என்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். மிகக் அதிகளவு செலவு செய்து மக்கள் தனியர் மருத்துவமனைகளை நாடுகின்றார்கள். அதற்காக நாம் மிகக் குறைந்த கட்டணத்தில் தனியர் மருத்துவ நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளோம். வெளிநாடுகளிலுள்ள தராதரத்திற்கு ஏற்ப எமது பிரதேசத்திலும் சிறந்த முறையில் இயற்கும் ஆங்கில மொழியிலான பாலர் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். கற்றலுக்காக என்ன தேவைகள் ஏற்படினும் தயங்காமல் என்னிடம் உதவிகேளுங்கள். 

நாம் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவேதான் வந்துள்ளோம். எம்மை நாடி மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். 20 இற்கு மேற்பட்ட நாடுகள் எமது போராட்டத்தை அழித்திருந்தார்கள். ஆனால் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க தமிழர்களாகிய எமக்கு இருப்பது கல்வி போராட்டம் அதற்காக நான் முன்னிறு செயற்பட்டு வருகின்றேன். என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: