12 Nov 2025

பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை.

SHARE

பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்திள பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது புதன்கிழமை(12.11.2025) பிரதேச  செயலாளர் உ.உதசிறீதர் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரனின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதன் போது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் இதுவரை காலமும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்றுக்கொள்ளாத சுமார் 50 இற்கும் மேற்பட்டோருக்கான பதிவு சான்றிதழ்களை அவ்விடத்திலேயே வழங்கி வைக்கப்பட்டன. 

இதன்போது கிழக்கு வலயத்துக்கான பிரதிப் பதிவாளர் நாயகம் கே.நடராசா, மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் பா.பரசுராமன், பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் கே.பேரின்பநாயகம், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

கலந்து கொண்டிருந்தனர். இந்த நடமாடும் சேவைக்கான அனுசரணையை மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் வழங்கியிருந்தது. 

இந்த நடமாடும் சேவையினை பிரதேச செயலக பதிவாளர் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















SHARE

Author: verified_user

0 Comments: