9 Jul 2020

வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் மூலமாக தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் - கூட்டமைப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார்.

SHARE
வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் மூலமாக தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் - கூட்டமைப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார். 
வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் நடைபெற இருக்கின்ற இந்தத் தேர்தலின் மூலமாக தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார்.

வியாழக்கிழமை (09) வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போது கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்….
  
தற்போதுள்ள அரச கட்சியானத வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்க நினைக்கின்றது. இதன் ஒரு செயற்பாடுதான் அண்மையில் கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுக்குப் பொறுப்பான ஜனாதிபதி ஆணைக்குழு. இவ்வாணைக் குழுவில் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை பெரும்பாண்மை இனத்தினை பிரதிபலிக்கின்ற பௌத்த மதம் சார்ந்த இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவாகவேதான் இது காணப்படுகின்றது.

கிழக்குவாழ் தமிழ் மக்களின் புராதன பாரம்பரிய கலாசார மற்றும் மத அடையாளங்களை இல்லாமல் செய்து பெரும்பாண்மை இன மக்களது பௌத்த மத அடையாளங்களை நிறுவுதற்கான ஒரு ஏற்பாடாக இந்த ஆணைக்குழுவின் செயற்பாடானது அமையுமோ என தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருந்த சந்தேகமானது அண்மையில் வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள வேத்துச்சேனை மற்றும் செங்கலடி பிரதேசத்தில் உள்ள குசான மலை முருகன் ஆலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற பிக்குகளின் அத்துமீறல்களை அடுத்து ஏற்பட்ட அந்தச் சந்தேகம் உண்மையாகி உள்ளதைக் காணலாம்.
மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட நல்லிணக்க நீதிப் பொறிமுறையில் இருந்து இலங்கை தன்னிச்சையாக விலகியமை மற்றும் தமிழ் இளைஞர்களை (மிருசுவில்) படுகொலை செய்ததற்காக நீதி மன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்தமை போன்ற விடயங்களானது இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுவதனைக் காட்டுவதாக உள்ளது.

எனவே இலங்கை அரசானது பெரும்பாண்மை இன மக்களுக்கும் பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்து ஏனைய இன மக்களினதும் அவர்களின் மதங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரிய எதிர்ப்பு காரணமாக தனது இத்திட்டங்களை பூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு முடியாமல் உள்ளதனால் த.தே.கூட்டமைப்பினை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என பல சூழ்ச்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டாலும் அவை பலனழிக்கவில்லை என்றே கூறலாம் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் த.தே.கூட்டமைப்பின் ஆசனங்களை குறைக்க வேண்டும் என கூட்டமைப்பிற்கு எதிராக பல கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் இலங்கை அரசு களமிறக்கினாலும் அவையும் பயனழிக்கவில்லை.

என்னதான் பிராயத்தனங்களைச் செய்தாலும் தமிழ் மக்களிடம் இருந்து த.தே.கூட்டமைப்பினை யாராலும் பிரிக்கவே முடியாது இதுதான் உண்மை. 
ஆகையால் நடைபெற இருக்கின்ற தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் மேலும் பலப்படுத்துவார்கள் இதனூடாக வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் மூலமாக தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.                



SHARE

Author: verified_user

0 Comments: