13 Jul 2020

எந்தக் காலமும் விளைச்சலையும் அதிக வருமானத்தையும் ஈட்டக்கூடிய வளத்தைக் கொண்டது மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா

SHARE
எந்தக் காலமும் விளைச்சலையும் அதிக வருமானத்தையும் ஈட்டக்கூடிய வளத்தைக் கொண்டது மட்டக்களப்பு மாவட்டம்.மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா
எந்தக் காலமும் விளைச்சலையும் அதிக வருமானத்தையும் ஈட்டக்கூடிய வளத்தைக் கொண்டது மட்டக்களப்பு மாவட்டம் என மட்டக்களப்பு விவசாய உதவிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா தெரிவித்தார்.

ஏறாவூர்ப் பற்று தீவுக் கிராமத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிலக்கடலை விதை உற்பத்தி அறுவடை விழாவின்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பிரிவு விவசாயப்ட போதனாசிரியர் பி. ரவிவர்மன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் விவசாயத் திணைக்களத்தின் சேவைகள் அமைந்திருந்தன. அதிஷ்டவசமாக கொரோனா வைரஸ் பரவலுக்கு ஓரிரு தினங்களுக்கு மன்னர் நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டதால் அவற்றை விவசாயிகள் உடனடியாக நடுகை செய்ததின் பொருட்டு இப்பொழுது அது விளைச்சல் கணள்டு அறுவடை செய்யக் கூடியதாக இருக்கின்றத.

வாகரையில் சுமார் 200 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டு அறுவடை செய்தாகி விட்டது.

இந்த நிலக்கடலை உற்பத்தி என்பது எந்தக் காலமும் பயிரிட்டு அதிக விளைச்சலையும் அதன் மூலம் அதிக வருமானத்தையும் ஈட்டக் கூடியதாக உள்ளது.

அதற்கேற்றாற்போல மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வளங்களும் அமைந்திருக்கின்றன. இந்த மகோன்னத வாய்ப்புக்களை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி முன்னேற்றமடைய் வேண்டும்.

மேலும் இப்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் சகல திணைக்கள அதிகாரிகளும் ஒருமித்த சிநற்தனையி-ன் கீPழ் பணியாற்றுகின்றார்கள். இது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய ஞானோதயமாகக் கூட இருக்கலாம்.

இவ்வாறான அர்ப்பணிப்புக்கள் அதிகாரிகள் மட்டத்தில் எந்தக் காலமும் இருந்தால் ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்” நிலக்கடலை உற்பத்திக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கிராக்கி எக்காலமும் உண்டு.‪

விளைச்சலும் இலாபமும்  குறைவாகத் தரக்கூடிய நெற் செய்கைக் காணிகளை நிலக்கடலை உற்பத்திக்குப் பயன்படுத்துவதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத இலாபத்தை ஈட்ட முடியும். விவசாயிகள் தங்களுக்கு அரசினாலோ அரச சார்பற்ற நிறுவனங்களினாலோ கிடைக்கும் உதவிகளை அடிப்படையாக வைத்து;க் கொண்டு தாங்களும் முதலீடு செய்து தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழி தேடவேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் விவசாய அதிகாரிகளான ஈ. சுகந்ததாஸன்இ என். விவேகானந்தராஜா, எம்.எச். முர்ஷிதா ஷிரீன், மனோகரி மகேசன், எஸ். துஷாந்த், ஏ. அனோஜன்‪‪ உட்பட விவசாயிகளும் பலரும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: