மாவட்டத்தில் கைத்தொழில்
முயற்ச்சியாளர்களை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்.
மாவட்டத்தில் கைத்தொழில் முயற்ச்சியாளர்களை வலுப்படுத்தி அதிகரிப்பதற்கான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை(20.02.2025) இடம்பெற்றது.
மாவட்டத்தில் உள்ள அரச, அரச சார்பற்ற பிரதிநிதிகளுடன் புதிய தொழில் முயற்ச்சியாளர்களை மாவட்டத்தில் உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான அவசியம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மேலும் உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர் பொருட்களை மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியதுடன் நவீன தொழில்நுட்பத்துடன் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன் போது அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் கிராமிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு துறைசார் ஆலோசனைகளையும், புதிய திட்டங்களையும் உடனடியாக ஆரம்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகத்தர்களுக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.
0 Comments:
Post a Comment