15 Jul 2019

பழைய தேர்தலா புதிய தேர்தலா என்ற சட்டச் சிக்கலில் மாகாண சபைத் தேர்தல். முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத், பழைய தேர்தலா புதிய தேர்தலா என்ற சட்டச் சிக்கலில் மாகாண சபைத் தேர்தல் சிக்கியிருப்ப்தாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.

SHARE
பழைய தேர்தலா புதிய தேர்தலா என்ற சட்டச் சிக்கலில் மாகாண சபைத் தேர்தல். முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத்,
பழைய தேர்தலா புதிய தேர்தலா என்ற சட்டச் சிக்கலில் மாகாண சபைத் தேர்தல் சிக்கியிருப்ப்தாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்பாட்டில் Centre for Monitoring Election Violence  தேர்தல் பிரசார நிதியாக்கம் தொடர்பான பொதுக் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை 14.07.2019 இடம்பெற்றது.
இந்நிக்வில் கலந்து கொண்ட சுதந்திரமானதும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலுக்காக செயற்படுகின்ற ஆர்வலர்கள் தேர்தல்கள் சம்பந்தமாக  எழுப்பிய சந்N தகங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

இதன்போது மாகாண சபைத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது, இதுவரை காலமும் பெண்களை அரசியலுக்குள் உள்ளவாங்க வேண்டும் என்று எந்தவித சட்டங்களும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கவில்லை,

ஆனால், 2017ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தின் மூலமும் அதேபோல 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 25 சத வீதம் உள்ளுராட்சி சபைகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்யப்படட்டது.

ஆனால் 20117 ஆம் ஆண்டின 17ஆம் இலக்க திருத்தச் சட்டமூலம் இது உள்ளுராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்போல் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டயாப்படுத்தப்படவில்லை.

அதேபோல மாகாண சபைத் தேர்தல் புதிய முறைப்படி நடைபெறுவதற்கு அந்தச்; சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் தற்போது நெருக்கடி நிலைக்குள்ளாக்கப்பட்டு அமுல் செய்யப்பட முடியாத நிலையிலுள்ள தேர்தல் தொகுதி எல்லை மீள் நிர்ணய விடயம் தீர்க்கப்பட வேண்டும்
அது தீர்க்க்பபட்டால்தான் புதிய முறைப்படி தேர்தல் நடத்தப்படலாம்.

அது இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பது எல்லோருக்கும் தெரியும், அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாவறாயின் நாடளுமன்ற மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டு அது இருண்டு வாரங்களில் அதன் அறிக்கைகயைச் சமர்ப்பித்திருக்க வேண்டும் ஆனால்;, இதுவெல்லாம் இதுவரை நடைபெற்றிருக்கவில்லை.

எனவே சட்டம் இதற்கு அப்பால் நகர முடியாமல் ஒரிடத்தில் போய் செருகிக் கொண்டு நிற்கிறது. அதற்கு அப்பால் அதனால் நகர முடியவால்லை.

இவ்வாறான நிலையில் பழைய முறைப்படி தேர்தலை நடாத்துவதாக இருந்தால் பழைய தேர்தல் முறையிலே  பெண்களுக்கென்று கட்டாய இட ஒதுக்கீடு இல்லை. புதிய முறையிலே தேர்தலை நடாத்துவதாக இருந்தாலும் அதிலே சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டும்.” என்றார்.

இலங்கையில் தேர்தல் செயற்பாட்டினை மிகவும் சுதந்திரமாகவும் நீதியாகவும் அதேவேளை நேர்மையானதாகவும் நடாத்துவதற்கு அவசியமான மாற்றத்தினை ஏற்படுத்துவத்த வேண்டுமெனில் தேர்தலுக்கென செய்யப்படுகின்ற செலவுகள், கிடைக்கின்ற நிதிகள் தொடர்பான தெளிவான விளக்கம் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி  இத்தகைய தேர்தல் பிரசார நிதியாக்கம் தொடர்பான பொதுக் கலந்துரையாடல் நாடெங்கிலும் நடாத்தப்பட்டு வருவதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திரமானதும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலுக்காக செயற்படுகின்ற ஆர்வலர்கள் சுமார் 125 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளர் ஆர். சசீலன், பப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் ஆணையாளர் ரோஹண ஹெற்றியாராச்சி,  தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்hளர், மாகாண இணைப்பாளர் ஏ.எம்.என் விக்ரர், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவர் ஷிராணி ஜனன், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி. பிரசன்யா, உட்பட இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: