17 Jul 2019

மட்டக்களப்பு சுகபோக வாழ்க்கை வாழும் மாவட்டம் அல்ல. ஆனாலும் ஜனநாகத்தைப் பலப்படுத்தும் செயற்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE

மட்டக்களப்பு சுகபோக வாழ்க்கை வாழும் மாவட்டம் அல்ல. ஆனாலும் ஜனநாகத்தைப் பலப்படுத்தும் செயற்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம்


மட்டக்களப்பு சுகபோக வாழ்க்கை வாழும் மாவட்டம் அல்ல. ஆனாலும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் செயற்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம்  Center for Monitoring Election Violence  தெரிவித்துள்ளது.

தூய அரசியலுக்கான செயற்திட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுபற்றி தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின்  Centre for Monitoring Election Violence       தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க செவ்வாய்க்கிழமை 16.07.2019 கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

ஜனநாயகத்தின் மூலாதாரம் தேர்தலாகும் ஆனால் ஜனாநாகத்தரின் ஒரேயொரு அங்கம் தேர்தல் மட்டுமாக இருக்க மாட்டாது அதற்குச் சமாந்தரமாக தேர்தலைப் போன்று தேர்தல் மறுசீரமைப்பும் உயிரோட்டமானதாகவும் இயங்குதிறனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

எமது அமைப்பு தேர்தல் மறுசீரமைபக்பு தொடர்பில் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

2008இல் இடம்பெற்ற தேர்தலே இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது அதற்குக் காரணம் அந்தத் தேர்தலில்தான் வாக்களிப்pபின்போது தேசிய ஆளயைடயா அட்டை கட்டாயம் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது.

தேர்தலில் உந்து சக்தியாகவும் நம்பிக்கைதரக் கூடியதாகவும் இருப்பது அடையாள அட்டையைக் கட்டாயப்படுத்திய அந்த சட்டம்தான்.

அவ்வாறு தேர்தலில் முடிந்தளவு மோசடிகளைத் தவிர்ப்பதற்காக அடையாள அட்டையைக் கட்டாயமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருப்பவர்கள் அரச சாரா தொண்டு நிறுவனங்களும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்ளும்தான்.

ஜனநாயகம் என்பது தேர்தலில் மட்டும் தங்கியிருப்பதில்லை அது ஒட்டு மொத்த தேர்தல் செயன்முறைகளிலும் தங்கியிருக்கின்றது.

நேர்மையான அரசியல் எங்களுக்குத் தேவை. தேர்தல் பிரச்சார நிதியைக் கட்டுப்படுத்துவதற்குரிய முறைமையொன்று இல்லாதவரைக்கும் தேர்தலானது இலங்கையில் நியாயமாகவும் நீதியாகவும் நடைபெறுவதில்லை என்பது கண்காணிப்பாளர்களின் அவதானமாகவுள்ளது.

முன்னர் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் என்று பொதுவாக அழைக்கப்பட்டு வந்தது. இப்பொழுது அதனுடன் சேர்த்து நேர்மைத் திறனான தேர்தல் என்ற சொற்பதம் இப்பொழுது தேர்தல் விடயங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் அந்த செயன்முறை இருக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் ஒரு அபேட்சகர் 10 மில்லியன் ரூபாய்களைச் செலவு செய்யும்போது அவருடன் எதிர்த்துப் போட்டியிடும் இன்னொரு எதிரணி வேட்பாளர் ஆயிரம் ரூபாய் கூடச் செயலவு செய்து போட்டியிட முடியாத நிலை வந்தால் அது நீதி நியாயமான தேர்தல் என்று கருத முடியாது.

அரசியலும் ஒரு விளையாட்டுத்தான் ஆனால் அது ஒரு மோசமான விளையாட்டு. அதற்கும் சட்டம் இருக்க வேண்டும். அது போட்டியிடுபவர்களைப் பொருத்தே நீதி நேர்மையானதா என்று கூற முடியும்.

அனைவருக்கும் சமமான தளம் இல்லை. குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் பெண்களுச்கு சமமான தளம், நிதி இல்லை. தேர்தல் களத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு, பாரபட்சம் உள்ளது.

தேர்தலுக்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்குவதிலேயேஇந்தப் பாரபட்சங்கள் தொடங்கிவிடுகின்றன.

பலவான் வெற்றிபெறுவது ஒரு ஜனநாயகத் தேர்தல் அல்ல. பலவீனமானவர்களும் வெற்றி பெற வேண்டும்.

பணம் படைத்தவர் பணம் இல்லாதவர் போட்டியிடும் ஒரு களமாக இலங்கதை; தேர்தல் களம் அமைந்துள்ளது.

இலங்கையில் தேர்தல் செயற்பாட்டினை மிகவும் சுதந்திரமாகவும் நீதியாகவும் அதேவேளை நேர்மையானதாகவும் நடாத்துவதற்கு அவசியமான மாற்றத்தினை ஏற்படுத்துவத்த வேண்டுமெனில் தேர்தலுக்கென செய்யப்படுகின்ற செலவுகள், கிடைக்கின்ற நிதிகள் தொடர்பான தெளிவான விளக்கம் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். இலங்கையில் தூய அரசியலை செயற்படுத்திக் காட்டும் பொறுப்பை மட்டக்களப்பு அரசியல்வாதிகளும் மட்டக்களப்பு பொதுமக்களும் நிரூபித்து முன்மாதிரியாகக் காட்ட வேண்டும்.

இலங்கையில் நுவரெலியாவும் மட்டக்களப்பும் இச்செயற்திட்ட முன்னோடி நடிவடிக்கைகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன." என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: