10 Feb 2019

அரசியல் தீர்வுக்காகத்தான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றதே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை அமைச்சர் விஜயகலா

SHARE
அரசியல் தீர்வுக்காகத்தான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றதே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை அமைச்சர் விஜயகலா 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் எமது அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவு அரசியல் தீர்வுக்காகத்தான் வழங்கியிருக்கின்றார்களே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. எமது மக்கள் பிரதேச சபை தொடக்கம் ஜனாதிபதி வரைக்கும் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இதில் யார் யார் எமது மக்களுக்காக சேவை செய்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 

என கல்வி இராஜாங்க அமைசர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுதாவளை மாகாவித்தியாலயம் (தேசியபாடசாலையில்) இன்று சனிக்கிழமை (09) மாலை நடைபெற்ற வருடாந்த இல்லல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு கருதுத:துத் தெரிவிக்கையிலே அவர் இதன்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புhடசாலை அதிபர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, பட்டிருப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி.புள்ளநாயகம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநானம், மற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்……

களுதாவளை மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தியது போல் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வவொரு பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். 29.01.2019 அன்று கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் படிப்பதற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் தமது பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக என்னிடம் அனுமதி கோரிய பெற்றோர்கள் சொல்லிலடங்காதவை.  

தமது பிள்ளைகள் தேசிய பாடசாலையில் படிக்க வைப்பதற்பகாக ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சைக்கு பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் கற்கின்றார்கள். இதன் நிமிர்தமாகத்தான் தொகுதிக்கொரு பாடசாலை தேசிய பாடசாலையாக உதரம் உயர்த்தப்பட வேண்டும்.  

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தீர்வு என்பது எமது கைகளுக்கு எட்டப்படவில்லை. கடவுள் அதனை எப்போது கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கின்றாரோ அன்றுதான் அது கிடைக்கும். ஆனால் அதற்காக நாம் முயற்சி செய்யாமல் இருக்க முடியாது. யுத்த காலத்திற்கு முன்னர் கல்வியில் வரலாறு படைத்தவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகும். ஆனால் கடந்த அரசாங்கம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்தபின்னர் வடக்கு கிழக்குப் பகுதியான எமது பகுதிக்கு போதைவஸ்த்துக்களை அனுப்பியுள்ளார்கள். வடக்கு கிழக்கு மக்களின் பலத்துடன் நல்லாட்சி அரசை அமைத்துள்ளோம். பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்டைகளில்தான் போதை வஸ்த்துக்கள் விற்கப்படுகின்ன. அதன் பின்னர் பாடசாலைகளுக்கு அருகாமையிலிருந்த பல பெட்டிக்கடைகளை நீக்கியிருந்தோம்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் வடக்கு கிழக்கிலுள்ள மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவில்லை. எமது பகுதியிலுள்ள பல தேசிய பாடசாலைகளில் வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றன. இவ்வாறு பல பாகுபாடுகள் கடந்த காலங்களில் காட்டப்பட்டுள்ளன. இவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இனிமேல் பாடுபாடுகள் காட்டாது வடக்கு கிழகிழக்கில் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். தற்போது நாம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதற்கு ஏனைய கட்சிகளும் அதரவு வழங்கியிருக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் எமது அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்கியிருக்கின்றது. இந்த ஆதரவு அரசியல் தீர்வுக்காகத்தான் வழங்கியிருக்கின்றார்களே தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல. எமது மக்கள் பிரதேச சபை தொடக்கம் ஜனாதிபதி வரைக்கும் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இதில் யார் யார் எமது மக்களுக்காக சேவை செய்திருக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். சந்திரிக்கா பண்டார நாயக்க இரண்டு தடவையும், மகிந்த ராஜபக்ஸ இரண்டு தடவையும் ஆட்சி செய்தார்கள் அவர்கள் எமது மக்களுக்கு எதை செய்தார்கள். தற்போதைய ஜனாதிபதியும் எமது மக்கள் வழங்கிய வாக்கைப் பெற்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மாறாக நடந்து நாங்கள் வழங்கிய வாக்குக்கு துரோகம் அழித்துள்ளார். 

அந்த 50 நாட்களும் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம், நாங்கள் கடந்த யாலத்தில் யுத்தத்திற்கு முகம் கொடுத்து, இயற்கை அனர்தத்திற்கு முகம் கொடுத்து, தற்போது பராளுமன்றத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும் முகம் கொடுத்திருக்கின்றோம். இவ்வாறு பலவற்றுக்கு நாம் முகம் கொடுத்திருக்கின்றோம். 

அன்று தொடக்கம் இன்றுவரை தாமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்கைக்காக எவ்வாறு போராடுகின்றதோ அதுபோல்தான் எமது தலைவரும் வாக்கில் மாறமாட்டார். எனவே கடந்த காலத்திலிருந்த கலைவர்களுக்கும், இன்று இருக்கின்ற தலைவர்களுக்கும், நாளை வரப்போகும் தலைவர்களுக்கும் நாங்கள் எவ்வாறான பாடம் புகட்ட வேண்டும் என்பதை மக்களுக்கும் தெரியும். 

நாங்க்ள வெள்ளைவேன் கலாசாரத்தை தடுத்தி நிறுத்தியிருக்கின்றோம். காணிகளை விடுவித்திருக்கின்றோம். சில கைத்திகள் விடுதலை செய்திருக்கின்றோம், பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றோம். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கை காட்டி சர்வதேசத்திடமிருந்த பெறப்பட்ட நிதிகள் தெற்கிலேதான் அந்த நிதி செலவு செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது அந்த நிலமை மாற்றமைந்துள்ளது. எனவே எமது தலைவர் தற்போது வடக்கு கிழக்கு பகுதிக்கு நேரடியாகச் சென்று அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார். இவ்வாறான தலைவர்கள் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் அவ்வாறெனில்தான் நாம் நினைத்த குறிக்கோளை அடைய முடியும். 

எமது பிரதமரின் சட்ட நுட்பங்களால்தான் நாம் மறு பிறவி எடுத்து தற்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள். தற்போது கம்பரெலிய திட்டதின் மூலம் அபிவிருத்திக்காக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பல வழிகளிலும் நிதி ஒதுக்கீடுக்ள செய்யப்படுகின்றன. 

எமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தொண்டர் ஆசிரிர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு அமைச்சரவைக்கு கேட்டிருக்கின்றோம். களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மண்டபம் அமைக்குமாறும், இப்பாடசாலையில் காப்படும் குiபாடுகளை பூர்தி செய்து தருமாறும் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள். என அவர் தெரிவித்தார்.

இதுவரை காலமும் களுதாளை மகாவித்தியாலயமாக கிழக்கு மாகாண சபையின் கீழ் செயற்பட்டு வந்த இப்பாடசாலை தரமுயர்த்தப்பட்டு தேசிய பாடமசாலையாக மாற்றப்பட்டு அதற்குரிய கடிதம் இராஜாங்க அமைச்சரினால் இதன்போது பாடசாலை அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதோடு, இப்பாடசாலையில் அமையவிருக்கம் மூன்று மாடிக்கட்டடத்திற்கான அடிக்கல்லும், நடப்பட்டு, மேற்படி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்ட களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்திற்குச் செல்லும் வீதியும் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் களுதாவளை கல்வின் சமூகம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பொன்னாடைகள் போரத்தி மலர் மாலைகள் அணிவித்து, ஞாபகச் சின்னங்களும், வாழ்த்துப்பாக்களும் வழங்கி இதன்போது கௌரதித்தனர்.

இந்து நடைபெற்ற விiயாட்டுப்போட்டியில் விபுலானந்தர், பாரதி, மற்றும் நாவலர், என்ற பெயரில் 3 இல்லங்கள் பிரிக்கப்பட்டு விளையாட்டுக்கள் இடம்பெற்றன் இதன்போது 463 புள்ளிகளை விபுலானந்தர் மற்றும் பாரதி ஆகிய இரு இல்லங்களும் சமமான முறையில் பெற்று இரண்டு இல்லங்களும் மதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 456 புள்ளிகளை நாவலர் இல்லம் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இதன்போது அடம்பெற்ற அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி என்பன பார்வையாளர்களின் மனங்களை வருடியிருந்தையும் குறிப்பிடத்தக்கதாகும்.















































SHARE

Author: verified_user

0 Comments: