கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராக சங்கரப்பிள்ளை சசிகரன் அவர்களை மீண்டும் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அப்பதவிக்கு மீள்நியமனம் செய்துள்ளார். முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.சசிகரன் தனது கடமையை திங்கட்கிழமை (11) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ்வாறு கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் முகம்மத், முன்பள்ளி பணியகத்தின் அம்பாறை மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர்களான எஸ்.எம்.புஞ்சிபண்டா, ஏ.எஸ்.எச்.சைபீடின் மற்றும் பணியகத்தின் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டnருந்தனர்.



0 Comments:
Post a Comment