19 Nov 2026

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விற்கும் இடையிலான சந்திப்பு

SHARE

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விற்கும் இடையிலான சந்திப்பு.

அவுஸ்திரேலியா, இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர் என்ற வகையில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் புதன்கிழமை (18.11.2026) இடம்பெற்ற விசேட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.

இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் அளப்பரிய ஒத்துழைப்புகளுக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார். 

நாட்டின் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவின் நவீன தொழில்நுட்ப ஆற்றல்களையும் அறிவையும் எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. 

குறிப்பாக, அவுஸ்திரேலியா எய்ட் ((Australia AID) நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் திட்டமிட்ட அபிவிருத்தி உதவிகளுக்கும் வாழ்வாதார ஆதரவுகளுக்கும் எனது விசேட நன்றியினை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் நேரடியாகத்  தெரிவித்துள்ளார். 

மேலும், எதிர்வரும் ஆண்டுகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தரத்தை உயர்த்தவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் தேவையான உதவிகளையும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் பிரபு  உத்தியோகபூர்வக் கோரிக்கை முன் வைத்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு, அவுஸ்ரேலியா உதவும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.


 

SHARE

Author: verified_user

0 Comments: