14 Nov 2026

களுவாஞ்சிகுடி பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு 467 இடங்களில் பரிசோதனை 8 பேருக்கு சட்டநடவடிக்கை

SHARE

களுவாஞ்சிகுடி பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு 467 இடங்களில் பரிசோதனை 8 பேருக்கு சட்டநடவடிக்கை.

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு, களுவாஞ்சிகுடி வடக்கு, மற்றும் பட்டிருப்பு பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை(13.11.2026) இடம்பெற்றது. 

களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படையினர் இலங்கைச் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் டெங்கு கள உதவியாளர்கள் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டு வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், சமயஸ்தலங்கள் போன்ற பல இடங்களில் இந்த விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. 

இதன்போது 467 இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு நுளம்பு குடம்பிகள் மற்றும் நுளம்பு பெருகும் சூழலை வைத்திருந்த 08 பேருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர த.கஜனனன் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: