மாவேற்குடாவில் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த மின் தூண்கள்
அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் பின்தங்கிய பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவேட்குடா பிள்ளையார் வீதியில் பாதுகாப்பற்ற முறையில் அமைந்திருந்த போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும், மற்றும் வீதி விபத்துக்களுக்கு காரணமாகவும் காணப்பட்ட மின்சாரத் தூண்கள் சம்பந்தமாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஆலய நிர்வாகத்தினர் விடுத்த வேண்டுகோளின் பேரில் போரீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அப்பகுதியில் காணப்பட்ட மின்சார தூண்கள் அகற்றும் நடவடிக்கை வியாழக்கிழமை(1911.202 முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு காணப்பட்ட பழைய மின்சார தூண்கள் அகற்றப்பட்டு புதிய தூண்கள் பாதுகாப்பான இடங்களில் மீண்டும் பொருத்தப்பட்டு மக்களுக்கு மின்சார பாவனை வசதியினை வழங்கி வைப்பதற்காக பாதுகாப்பான இடங்களில் அவை மீண்டும் நாட்டி வைக்கப்பட்டன.
மின்சாரத் தூண்களை அகற்றும் பணிகள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரடியாக களத்திற்கு சென்று எடுக்கப்படும் பணிகளை பார்வையிட்டிருந்தார்.
இதன்போது மின்சார சபை உயர் அதிகாரிகள்,
போரதீவுபற்று பிரதேச சபை உறுப்பினர்கள்,
பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டு
இவ்வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment