களுதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன்
ஆலயத்தில் நடைபெற்ற சூர சம்ஹார நிகழ்வு.
மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு
களுதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன்
ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(15.11.2026) மாலை மிகவும்
சிறப்பாக இடம்பெற்றது.
கந்த சஸ்டி விரத்தின் இறுதி நாளாகிய இன்றயதினம் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்தைத் தொடர்ந்து முருகப்பெருமான் மயில் வாகனத்தில் வலம் வர கூரன்போர் இடம்பெற்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரபத்மன் பல்வேறு உருவங்கள் கொண்டு முருகப்பெருமானை அழிப்பதற்கு முயன்றான். இறுதியில் பத்மாசூரனை மாமரத்தில் மறைந்திருந்து முருகப்பெருமானை தாக்குதவ்கு முயன்றான் இந்நிலையில் முருகப் பெருமான் வேல் கொண்டு பத்மாசூரனை வதம் செய்தார். சூரபத்மன் சேவலாகவும் கொடியாகவும் மாறினான். சூரன் மரணித்த மாமரத்தின் இலை, காய்களை மக்கள் எடுத்துச் சென்றனர்.











0 Comments:
Post a Comment