கடந்த 30வருட போராட்டத்திலே நாங்கள் பல உயிர்களைத் தியாகம் செய்துள்ளோம் - தவிசாளர் மதிமேனன்.
என போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்துள்ளார்.
கடந்த 30வருட போராட்டத்திலே நாங்கள் பல உயிர்களைத் தியாகம் செய்துள்ளோம். எமது இனத்திற்காகவும், எமதுஉரிமைக்கான போராட்டமாகக் காணப்பட்டாலும் தமிழர்களாகியாநாம் இறுதிப்போரின் போது 150000 இற்கும் அதிகமான உயிர்களைப் பலி கொடுத்துள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபை மக்களது வரிப்பணம் மக்களுக்கே என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக சுகாதாரப் பகுதியின் ஊடாக பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டின்கீழ் அப்பகுதி கற்பினித் தாய்மாருக்கான போசாக்கு உணவுப் பொதி வழங்கும் செயற்திட்டம் புதன்கிழமை(18.11.2026) போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.
போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் 10 வட்டாரங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 கற்பினித் தாய்மாருக்கு இதன்போது முதற்கட்டமாக குறித்த போசாக்குப் உலர் உணவுப்பொதிகள் பிரதேச சபையின் சொந்த நிதியில் இருந்து பொது மக்கள் நலன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நிகழ்வில் பிரதேச சபை உபதவிசாளர் கலராஜ், பிரதேச சபை உறுப்பினகள், செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கற்பினித் தாய்மார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு போசாக்குப் பொதிகளைத் தாய்மாருக்கு வழங்கி வைத்தனர்.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கையில் பிறப்பு வீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதில் தமிழர்களின் பிறப்பு வீதம் அதளபாதாளத்தில் உள்ளது. பிறப்பு வீதத்தினை தமிழர்களாகிய நாங்கள் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
கடந்த 30வருட போராட்டத்திலே நாங்கள் பல உயிர்களைத் தியாகம் செய்துள்ளோம். எமது இனத்திற்காகவும், எமதுஉரிமைக்கான போராட்டமாகக் காணப்பட்டாலும் தமிழர்களாகியாநாம் இறுதிப்போரின் போது 150000 இற்கும் அதிகமான உயிர்களைப் பலி கொடுத்துள்ளோம்.
இந்த நாட்டிலே எங்களுக்கான சமஉரிமை, அதிகாரம் என்பவற்றிற்காக 30 வருட போராட்டத்தை ஆரம்பித்து, அதிலே பல இழப்புகளையும், சனத்தொகை வீழ்ச்சியையும் சந்தித்துள்ளோம்.
ஆயுத போராட்டம் மௌனித்த பின்னரும்கூட எமக்கான உரிமையைக் கோரி இன்னும் அரசியல் ரீதியான போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையிலே போரதீவுப் பற்றுப் பிரதேச சபையினால் எமது மக்களுக்குரிய எல்லா விடயங்களையும் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும், பல விடயங்களை எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த உதவிகள் மாத்திரமல்ல பிள்ளை பிறந்து பாலர் பாடசாலைக் கல்வியை எமது சபையினூடாக செயற்படுத்தப்படும் பாலர் பாடசாலைகளிலேயே கல்வி பயில முடியும். அதுத்திரமின்றி கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான திட்டங்களும் எம்மிடம் உள்ளன. அத்துடன் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக வட்டாரங்களின் பொதுநூலகங்களை ஈ-நூலகங்களாக மாற்றும் செயற்திட்டங்களும் உள்ளன. அத்துடன் நகர்ப்புற வசதிகளைப் போன்று கிராமப்புறமான எமது பிள்ளைகளுக்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக வெளிநாட்டு தூதரகங்களுடன் உரையாடி வருகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment