இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் இந்திய
நிதியமைச்சரிடம் எடுத்துரைத்தோம் - பா.உ.சிறிநாத்.
இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் நாம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் எடுத்துரைத்திருந்தோம். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு விருப்பமுள்ளவர்களுக்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். என இந்திய நிதிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களின் நேரடி கவனத்திற்குக் கொண்டு சென்றதாக இலங்கைத் தமிழரசுக் கட்சின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதாம்பி சிறிநாத் தெரிவித்தார்.
திங்கட்கிழமை(02.11.2026) மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
நான் கடந்த வாரம் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும், புதுடெல்லிக்கும் விஜய் செய்து அங்குள்ள பல அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தேன். தமிழின சுத்திகரிப்பு அதே போன்று காஷ்மீரில் நடைபெற்ற இனசுத்திகரிப்பு தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒப்பீடு தொடர்பான ஆய்வு மாநாட்டுக்கு நான் பிரதான பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஆவுஸ்திரேலியா தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், அமெரிக்காவின் செயற்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் வன்னிஅரசு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்குரிய இளைஞரணி தலைவர் சூர்யா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கு பொறுப்பான செயலாளர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சந்தித்தேன். அத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பொது செயலாளர் ஏ.பி.சந்தோஷ் அத்தோடு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்தித்தோம்.
இலங்கையிலேயே ஒரு புதிய அரசு அமைந்திக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் நெருக்கடிகள் தீர்க்கப்படாமல் சமகாலத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகள், அரசியல் தீர்வுகளுக்கான முயற்சிகளுக்கான இழுத்தடிப்பு, தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற காணி பிரச்சினை, தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகள், அதுபோல் சமகாலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்றது என்ற போர்வையிலே அரசாங்கத்தை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுகின்ற சட்டம் என்ற போர்வையில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பிலும் நாம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.
அவர்கள் எமது கருத்துக்களை மிகவும் சிரத்தையுடன் அவதானித்தார்கள். தொல்பொருள் என்ற போர்வையிலேயே ஆலயங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள் குறிப்பாக திருகோணமலையில் சிவன் ஆலயத்திலே தொல்பொருள் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பணிகள் இதனால் பாதிக்கப்படும் ஆன்மீகத் தன்மை, தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட நுணுக்கத்தின் ஊடாக பல செயற்றிடங்கள் முன்னெடுக்கப்பட்டுவதோடு பௌத்த விகாரைகள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறன.
இலங்கையிலே புதிய அரசு அமையப்பெற்றுள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இரண்டு ஆண்டுகளாக எந்த விதமான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை தேர்தல்கூட நிச்சயமற்ற தன்மை இருக்கின்றது. இது தொடர்பில் மிகவும் விரிவாக எடுத்துரைத்துதோடு இதனை உன்னிப்பாக இந்திய நிதியமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இவ்விடையங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தமது கருத்துக்களை தெரிவித்திருப்பதாகவும் ஆலயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிப்பதாகவும், இலங்கை தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களுக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இது தொடர்பில் எடுத்துரைப்பதாகவும் இந்திய நிதியமைச்சர் உறுதியளித்தார்.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவினுடைய ஈடுபாட்டை நாம்
கோரியிருந்தோம். அதுபோல் இந்தியாவின் உதவியுடன் வடகிழக்கிலேயே அபிவிருத்தி
திட்டங்கள் கட்டுமானங்களை மீண்டும் செய்ய வேண்டும் என்பதையும் நாம்
எடுத்துரைத்ததோடு, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள்
இன்னும் அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதையும் நாம் அவர்களது
கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
நிலையில் இராஜதந்திர ரீதியில் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படாத வண்ணம் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல விடயங்களை முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் செய்வதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
புதிய அரசு பல விடயங்களை நாடு ரீதியாக முன்னெடுத்திருந்தாலும்கூட வடகிழக்குலே மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமானங்கள் பொருளாதார நடவடிக்கைகள் மாகாண சபை தேர்தல் அரசியல் தீர்வு போன்ற பல விடயங்கள் செய்யப்படாமல் இருப்பது போன்ற விடயங்கள் உதவியை எதிர்பார்ப்பினை வெளிக்காட்டி இருந்தோம்.
இந்நிலையில் இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை அகதிகள் தொடர்பில் நாம்
எடுத்துரைத்திருந்தோம். அவர்கள் மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விரும்பினால்
அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு இலங்கை வரவிரும்பாமல் உள்ள அகதிகளை இந்திய நிரந்தர குடியுரிமையை
பெற்றுக் கொடுப்பதற்குரிய தேவைப்பட்டையும், இலங்கை இந்திய
மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் நாம்
எடுத்துரைத்திருந்தோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment