20 Nov 2026

சமூக ஊடகங்களும் மத நல்லிணக்கத் தொடர்பாடலும் மட்டக்களப்பில் கருத்தமர்வு.

SHARE

சமூக ஊடகங்களும் மத நல்லிணக்கத் தொடர்பாடலும் மட்டக்களப்பில் கருத்தமர்வு.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “சமூக ஊடகங்களும் மத நல்லிணக்கத் தொடர்பாடலும்” எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு வியாழக்கிழமை(19.11.2026) மட்டக்களப்பு விவேகானந்தா தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. 

இக்கருத்தமர்வில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மதத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

சமூக ஊடகங்களைப் பொறுப்புடனும் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்துவது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து புரிந்துகொள்வது, போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை அடையாளம் காண்பது, தவறான தகவல்கள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்கருத்தமர்வில் கலந்துரையாடப்பட்டன. 

குறிப்பாக, பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் மத்தியில் புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கு சமூக ஊடகங்களை எவ்வாறு நேர்மறையான முறையில் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக விளக்கங்களும் கருத்துப் பகிர்வுகளும் இடம்பெற்றன. 

மேலும், மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் தவறான புரிதல்களையும் உருவாக்கக்கூடிய தகவல்களைப் பொறுப்புடன் கையாளுதல், உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்த்தல், சமூக ஊடகங்களை அமைதி, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் தொடர்பாடல் தளமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டன. 

“சமூக ஊடகங்கள் பிரிவினையை உருவாக்கும் கருவியாக அல்லாமல், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களை இணைக்கும் பாலமாக அமைய வேண்டும்” மதநல்லிணக்கம், பொறுப்பான சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அமைதியான சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில என்ற அடிப்படை நோக்கத்துடன் இக்கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: