கிறிஸ்தவ பெருமக்கள் உயிர் நீத்த உறவுகளின்
நினைவாக சவக்கால பெருநாள் வழிபாடுகளை முன்னெடுப்பு.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ பொதுமக்கள் திங்கட்கிழமை(02.11.2026) தமது உயிர்நீத்த உறவுகளின் நினைவாக உயிர்ப்பின் உறைவிடத்தில் திங்கட்கிழமை தமது உறவுகளின் இருப்பிடத்தை கண்ணீர் மல்க துப்புரவு செய்து மலர்களால் அலங்கரித்து சந்தனக்குச்சி மற்றும் மெழுகுவர்த்தியை ஏத்தி அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி வழிபாட்டு நிகழ்வுகளை மேற்கொண்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ சேமகாலையிலும் தமது உயிர் நீத்த உறவுகளை நினைந்து ஆத்ம சாந்தி வேண்டி விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தமது உறவுகளுக்காக விரதம் இருந்து கண்ணீர் மல்கி தம்மை விட்டு பிரிந்த உறவுகளை
நினைந்து உயிர்ப்பின் உறைவிடமான இடத்தை முற்றாக சுத்தப்படுத்தி மலர் தூவி
வழிபாடுகளில் ஈடுபட்டதை காணக் கூடியதாக இருந்தது.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment