15 Sept 2026

களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ கடற்கரை விநாயகர் ஆலயத்தின் புதிய மூலஸ்தான அடிக்கல் நாட்டு விழா.

SHARE

களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ கடற்கரை விநாயகர் ஆலயத்தின் புதிய மூலஸ்தான அடிக்கல் நாட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ கடற்கரை விநாயகர் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா  திங்கட்கிழமை(14.09.2026) நடைபெற்றது. 

நிகழ்வின் பூர்வாங்க கிரியைகள் நடைபெற்று சுப முகூர்த்த வேளையில் மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல் நட்டு வைத்தார். 

மேலும் இதன்போது ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், வேல்பரமதேவ, குருமார்கள், ஆலய நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது முதற்கட்டமாகத் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகைப் பணத்தை ஆலய தலைவரிடம் கையளித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தொடர்ந்து ஆலயத்தின் கட்டடப் பணிகளுக்காகத் தனது தனிப்பட்ட நிதியிலிருந்தும், நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தும் தொடர்ந்து நிதிப் பங்களிப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: