15 Sept 2026

மட்டு.முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் வரலாற்றுச் சாதனைக்கு பாராட்டு.

SHARE

மட்டு.முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் வரலாற்றுச் சாதனைக்கு பாராட்டு.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முதலைக்குடா மகா வித்தியாலய மாணவன் சுரேஸ்குமார் சதுரிகன் அகில இலங்கை தமிழ் மொழிதினப் பாவோதல் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளார்.

சாதனை படைத்த சுரேஸ்குமார் சதுரிகனுக்கு  செவ்வாய்க்கிழமை (15.09.2026) பாடசாலை அதிபர் ஏ.கிருபாகரன் தலைமையில்

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பாராட்டும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.தேவரஜனி உதயகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்தினார். 

இந்நிகழ்வில் கல்வி திணைக்கள அதிகாரிகள், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் தேசிய ரீதியில் நடைபெற்ற பாவோதல் போட்டியில் சதுரிகன் வரலாற்றுச் சாதனை புரித்துள்ளதாக இங்கு உரையாற்றிய கல்வி திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: