2 Jul 2026

பட்டிருப்பு கல்வி வலய சாதனையாளர் பாராட்டு விழா - 2026

SHARE

பட்டிருப்பு கல்வி வலய சாதனையாளர் பாராட்டு விழா - 2026

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து கலிவிப் பொதுத்தர சாதாரண தரப்பரீட்சை, கல்விப் பொதுத்தர உயர் தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன், மற்றும் கல்வி அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்ள் பெற்றோர்கள் என கலந்து கொண்டனர். 

இதனைபோது சாதனைப் படைத்த மாணவர்களுக்கு கேடயங்கள், மற்றும் சான்றிதழ்கள் மற்றும் பதங்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.















SHARE

Author: verified_user

0 Comments: