2 Jun 2026

கட்டுரை : மாதவிடாய்க்கு அளிப்போம் மாண்பினை.

SHARE

கட்டுரை : மாதவிடாய்க்கு அளிப்போம் மாண்பினை.

 (வ.சக்திவேல்)

 சர்வதேச மாவிடாய் சுகாதார தினம் வருடாந்தம் மே மாதம் 28 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகின்றது. இந்நிலையில்,பெண்கள் மாதாந்தம் அனுபவிக்கும் மாதவிடாய் தொடர்பில் இன்னமும் சமூத்தில் உரிய விழிப்புணர்வின்மையால் பாடசாலை மாணவிகள் தொடக்கம் வேலைத்தளங்களில் உள்ள பெண்கள் வரைக்கும் அக்காப்பகுதியில் மிகுந்த அவஸ்த்தைகளை எதிர்கொள்வதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களும், பெண்கள் தொடர்பில் கடமையாற்றுகின்ற அமைப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே “மாதவிடாய்க்கு அளிப்போம் மாண்பினை என்பதற்கிணங்க அவர்கள் செயற்பட்டு வருவதாகவும், தெரிவிக்கின்றனர்.

இன்றய காலகட்டத்தில் அனைத்து ஆண்களும் பெண்களும், இவ்விடையம் தொடர்பில் தெழிவடைய வேண்டியுள்ளதாகவும், அதற்காக இது தொடர்பில் தெழிவூட்டும் செற்பாடுளிலும் கிராம மட்டத்தில் அரச சார்பற்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருவதையும் காணமுடிகின்றது. ஆனாலும் பாடசாலை நேரங்களில் பல பாடசாலைகளில் மாணவிகள் நப்பின்கள் மாற்றும் வசதிகளோ, சுகாதார நடைமுறைகளைப் பேணும் வசதிகளோ அற்ற நிலையிலேயேதான் தமது கல்வியைத் தொடர்வதாக பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தென்னாசிய நாடுகளில் கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றக்   குறிகாட்டிகளில் முதன்மையானதோர் நாடாக இலங்கை உள்ளது. ஆனாலும் எங்களது கீழைத்தேயப் பண்பாடும் பழகக்வழக்கங்களும் ஏதோவோர் வடிவில் எம்மை ஆக்கிரமிப்பதனை யாராலும் மறுதலிக்க முடியாது. பாலியல் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் பற்றிய விழிப்புணர்வினை எமது ஒவ்வொரு திட்டங்களும் கொள்கைகளும் ஏதோவோர் விதத்தில் உள்வாங்கியிருந்தாலும் இன்றுவரை எமது நாட்டிலே பெண்கள் தமது மாதாந்த மாதவிடாய்க் காலங்களில் பெரிதும் உளரீதியாக அவர்களது குடும்பத்தினாலும் சமூகத்தினாலும் வேலைத்தளங்களிலும் ஏதோவோர் விதத்தில் பாதிப்புக்குட்படுத்தப்படுகின்றார்கள். 

இதற்கு முதன்மையான காரணமாக நாம் எமது பிள்ளைகளுக்குப் பாலியற்கல்வி பற்றியோ அல்லது அவர்களது சமூகமயமாக்கலிலே பெண்ணுக்குரிய மதிப்பினை வழங்கி வளர்க்கும் பொறுப்பினைத் தவிர்த்து விடுவதே பிரதானமாக அமைகின்றது. இன்று எத்தனை பெண் குழந்தைகள் இந்த நிலைமையினால் மொட்டிலேயே காமுகர்களால் கசகக்ப்படுகின்றனர்.

ஓர் பெண் பூப்பெய்திய காலம் முதல் அவள் மாதாந்த மாதவிடாய்ச் சக்கரத்தின்பால் இயற்கையாகவே அவள் உடல் செயற்படத் தொடங்குகின்றது. ஆனால் எமது குடும்பத்திலோ அவளது மாதவிடாய்க் காலங்களில் அவளுக்கான ஓய்வினை வழங்குவதோ அல்லது சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புக்களினை வழங்குவதோ மிக அரிது. இது சாதாரணமானதோர் விடயம் - பெண்களுக்கு இயற்கையானது என்ற மெத்தனப் போக்கினால் குடும்பத்தினரிலிருந்து ஆரம்பிக்கின்றது இந்த மதிக்காத்தன்மை. அதன் விளைவுதான் இன்றும் பெண்கள் தமது பாடசாலைக் காலங்களில் பல தொற்றுகக்ளுக்கு இலக்காவதிலிருந்து இறுதியில் அவர்கள் ஓர் குழந்தைக்குத் தாயாக முற்படுகையில் அதன் விளைவுகளை அப்பெண் அனுபவிக்க நேரிடுகின்றது. இதனால் அவளது குடும்பமே மனவேதனையைச் சுமக்க நேரிடுகின்றது. குடும்பத்தில் உள்ளவர்கள் எப்பொழுது இந்த மாதவிடாய் என்பது பெண்களுக்கேயுரித்தான மதிக்கப்பட வேண்டிய ஓர் உடற்தொழிப்பாடு என்பதனை ஏற்கத் தொடங்குகின்றார்களோ அன்றுதான் மாண்புக்குரிய மாதவிடாய் (Dignified menstruation)  என்ற எண்ணகக்ரு எமது நாட்டிலும் பெருமையினைப் பெறஆரம்பிக்கும். 

நாம் கல்வியில் சுகாதாரத்தில் பண்பாட்டில் எல்லாம் சிறந்து விளங்குகின்றோம் என்று மார்தட்டும் எமது நாட்டிலே மிக அண்மைக்காலமாகப் பெண்கள் குழந்தை பெறும் நிலைமை குறைவடைந்து செல்வதனை அரசின் உத்தியோகபூர்வப் புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன. இதற்கு முக்கியமாகப் பெண்களது உரிமைகள் சார்ந்து குரல் கொடுப்போரும் சுகாதாரத் துறையினரும் முன்வைக்கும் காரணங்களிலொன்று பெண்பிள்ளைகளை மாதவிடாய்க்காலங்களில் அவர்களது உணவு மற்றும் போஷாக்கு நிலைமைகளில் கவனஞ்செலுத்தாதது மட்டுமன்றி அக்காலங்களில் அவர்களது உள ஆரோக்கியத்தினையும் எமது சமூகம் பேணத் தவறியமையும் காரணம் என்கின்றனர். ஓர் சமூக செயற்பாட்டாளராக நாம் இதனைச் சுகாதாரத்திற்கு அப்பால் மாண்புக்குரிய ஓர் விடயமாக இம்மாதவிடாயினைப் பார்கக் முற்படுகின்றோம். மனித இருப்பினை உறுதிப்படுத்தும் பிள்ளைகளை உருவாக்கும் ஆற்றல் படைத்த பெண்கள் குழாமுக்கு  எதனைச் செய்தாலும் தமது நன்றிக்கடனைச் செலுத்திவிட முடியாது என ஒவ்வொரு மனிதனும் மனதார எண்ணும் நாள் என்று உதயமாகின்றதோ அன்றுதான் எமது பெண்கள் தமக்கான மாண்பினை இப்பூமியிலே பெற்றுக்கொண்டவர்களாவர்.

மாதவிடாய்க்காலங்களில் பெண் நாளாந்தம் தமது குடும்பப் பொறுப்புகக்ளையும் கடமைகளையும் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். 

காலையில் எழுவது முதல் அவள் சமையல், பிள்ளைகள் பராமரிப்பு, இதர குடும்ப அங்கத்தவரர்களைக் கவனிப்பது, பாடசாலை செல்லும் மாணவியாயின் நாளாந்த கடமைகளைத் தவறாது செய்வது எனப் பம்பரமாகக் சுழலும் நிலையில் அவளது போஷாக்கான உணவினைப் பற்றியோ அவளது உடல்நிலை பற்றியோ யாரும் கவனத்திலெடுப்பதில்லை. சில தருணங்களில் அவள் வயிற்றுவலி மற்றும் உடல் வலியினைச் சகித்துக் கொண்டு செயற்பட வேண்டியுள்ளது. அத்தருணத்தில் அவளது குருதிப்போக்கு அதிகரிக்குமாயின் அவள் மயக்கநிலை, பதட்டம் போன்றவற்றுக்கு ஆட்பட்டு உளப்பாதிப்பினையும் உடற்பாதிப்பினையும் ஒருங்கே எதிர்கொள்கின்றாள். இந்தப் பாதிப்புக்கள் ஆண்பிள்ளைகள் எதிர்கொள்ளாதவை. அதனாத்தான் பெண்கள் பூப்பெய்தல் என்பது அவர்களுககு; ஆச்சரியத்தையும் ஆர்வத்தினையும் தூண்டுவதாயுள்ளது. பாலியற்கல்வியினை நாம் ஆரம்பக்கல்வி முதலே சொல்லிக் கொடுக்கத் தொடங்குவோமாயின் அவர்களும் பெண்களது இன்றியமையாமை உணர்ந்து அவர்களுக்கான மாண்பினைக் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். சில ஆண்கள் தமது தாய், சகோதரி, மனைவி மற்றும் ஏனைய பெண்களை மதித்து நடப்பதனை எங்கள் சமூகத்தில் காண்கின்றோம். அவர்களிடத்திலே பெண்களது உடல்நிலை, பெண்மை மற்றும் தாய்மை பற்றிய அறிதலும் புரிதலும் உள்ளமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இந்நிலை அனைத்து ஆண்களுக்கும் கிடைக்குமாயின் எமது நாட்டிலே பெண்களுகn;கதிரான வன்முறைகள் பூச்சிய நிலைமையினை அண்மித்து விடும். 

இந்தக் காலத்திலே பெண்கள் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட குடும்பமும் சமூகமும் பெண்களை அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட நாட்கள் வரை ஆலயங்களுக்குள் பிரவேசிகக் முடியாது. நற்காரியங்களில் அவர்கள் ஈடுபட தடை விதிக்கப்படும் அது மட்டுமல்ல சில தொழில்களில்கூட மாதவிடாய்க்காலங்களில் அவர்கள் ஈடுபட முடியாது. குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு இங்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதனால் பல பெண்களைத் தலைமையாகக் கொண்டு வாழும் குடும்பங்கள் மாதாந்தம் தொழிலினை இழப்பதனால் பொருளாதாரச் சிக்கல்களை அனுபவிக்கின்றனர். 

சில பாடசாலைகளில் மாணவியர் தமது மாதவிடாய்க்காலங்களில் உரிய மலசல கூடங்களின்றி துன்பப்படுவதனை அவர்களுடனான சந்திப்புக்களின்போது அறிய முடிகின்றது. அதிலும் கொடூரம் அவர்கள் தமது நாப்கின்களைத் தொடர்ந்து மாற்றாது சகித்துகn;காள்வதனால் தொற்றுக்கள் எற்பட்டு அடுத்த சில நாட்கள் பாடசாலைக்கு சமுகமளிகக் முடியாமலிருப்பதும் இவ்வாறு மாதாந்தம் துன்பங்ளை அனுபவிப்பதனால் அவர்களது கற்றல் மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகள் பாதிகக்ப்படுவதும் ஒவ்வொரு மாணவிக்கும் எழுதப்படாத வழக்கமாகி விட்டது. எமது நாட்டிலே இன்றுவரை வெறும்  30 வதீமான பெண்களே மாதவிடாய் நாப்கின்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறாயின் எனையவர்களின் நிலைமை? எமது நாட்டில் மாதவிடாய்க்காலங்களில் நாம் எவ்வாறான முக்கியத்துவத்தினைக் கொடுக்கின்றோம் என்று பாரக்க வேண்டியுள்ளது. 

அலுவலகங்களில், வர்த்தக நிலையங்களில் மற்றும் தொழிற்தளங்களில் பலபெண்கள் மாதவிடாய்க்காலங்களில் தொடர்ந்து நின்று கொண்டே பணியாற்றுவதனையும் அக்காலங்களிற்கூட பெண்களது நிலைமைகளைக் கவனத்திற் கொள்ளாது முகாமைத்துவம் இடைவிடாது வேலை வாங்குவதனையும் நாளாந்தம் காண முடிகின்றது. உண்மையில் இந்தியாவின் சோமேற்றோ (Zomato) என்ற  நிறுவனம் அவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் ஆண்டுக்கு பத்து நாட்கள் மாதவிடாய்க் கால விடுமுறையினை வழங்கி முன்னோடியாக செயற்பட முன்வந்துள்ளது. இத்தகைய நிலைமை எமது நாட்டிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களால் முன்னோடியாக முன்னெடுக்கப்படுமாயின் எமது பெண்களும் நன்மை பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பாடசாலைகளில் அரசாசர்பற்ற நிறுவனங்கள் பெண்பிள்ளைகள் படும்பாட்டினைக் கவனத்திற் கொண்டு அவர்களுக்குத் தேவையான மலசலகூடங்களையும் நாப்கின்களை அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளமையினைக் கல்விச்சமூகம் இன்றும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதனைக் ;காணமுடிகின்றது. அதேபோன்று சில மருத்துவபீட மாணவியர்கள் இணைந்து மாதவிடாயின் முக்கியத்துவம் மற்றும் சுகாதார நிலமைகள் பற்றி விழிப்புணர்வுகள் வழங்குவதனையும் காணமுடிகின்றது. 

எது எவ்வாறாயினும் பெண்களின் ஆளுமைகளை நலிவுறச் செய்யக்கூடிய இத்தகைய இயற்கையான விடயங்களைக் கவனத்திற்கொண்டு உரிய கொள்கைகளினை பொருத்தமான வல்லுனர்களைக் கொண்டு வகுப்பது, சிவில் சமூக அமைப்புக்களின் ஆதரவினைப் பெற்று பரவலான விழிப்புணர்வுகளினையும் திட்ட முயற்சிகளினையும் முன்னெடுப்பது குறிப்பாகப் பெண்களுக்கெதிரான வன்முறைகளை மையப்படுத்தி அனுஷ்டிக்கப்படும் 16 நாட்கள் செயற்பாட்டுவாத நாட்களின்போது இந்த விடயத்தை தொனிப்பொருளாக வைத்து நாடு முழுவதும் நிகழ்வுகளின்வழி மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, பேசவெட்கப்படும் இவ்விடயத்தை அனைவரும் துணிந்து பேசமுன்வருவது, ஊடக பிரசாரம் மூலம் செயற்படல், என இன்னோரன்ன விடயங்களை, எமது நாட்டில் முன்னெடுப்பது மிக முக்கியமான தேவையாக மாறிவிட்டது. அதற்காக எமது நாடு செயறபட இன மத மொழி பேதமின்றி அனைவரும் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது.

எனவே மாதவிடாய்ச் சக்கரம் பெண்களுக்குமாத்திரம் உரித்தானது அதனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிடாமல் பெண்களுக்கு அக்காலப்பகுதியிலாவது உதவிகளைப் புரியவும், அதிக வேலைக்களுகளைக் குறைக்கவும், மன உழச்சல், போன்றவற்றை கொடுக்காமலிருக்கவும். பாடசாலைகளில் முறையான மலசலகூட வசதிகள், நப்பின்களை மாற்றுவதற்குத் தகுந்த இடவசதிகள், போன்வற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கவும், சம்மந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்பதுவே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: