1 Jun 2026

இந்த நாட்டிலே உள்நாட்டு பொறிமுறை என்பது உளுத்துப்போன உருப்படியில்லாத ஒரு முறைமை ஆகும். - ஸ்ரீநேசன் எம்.பி. ஆதங்கம்.

SHARE

இந்த நாட்டிலே உள்நாட்டு பொறிமுறை என்பது உளுத்துப்போன உருப்படியில்லாத ஒரு முறைமை ஆகும். - ஸ்ரீநேசன் எம்.பி. ஆதங்கம்.

மட்டக்களத்திலும் சின்னபொடியன் ஒருவன் கடுமையான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்காக தற்போது சிலர் அழுது கொண்டிருக்கின்றார்கள். படித்தவர்கள்கூட அழுகின்றார்கள்.

கருத்துக்கள் எங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக அந்த கருத்துக்களை நாங்கள் முடக்ககூடாது, தடுக்கக்கூடாது, அந்த கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முக்கிய தூண்களின் ஒன்றாக காணப்படுகிறது. ஊடகத்துறை ஜனநாயகத்தின் நான்காவதுதூண் எனவும் சொல்லப்படுகின்றது.

என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிரோஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22 வது ஆண்டு நினைவு தினைத்தை முன்னிட்டு மட்டக்களப்பைச் சேர்ந்த 23 இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி நெறியும் நடேசன் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை(31.05.2026) மட்டக்களப்பில் அமைந்துள்ள ஊடக வள கற்கை நிலையத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இதன்போது கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு செய்தி எழுதுதல், ஊடக அறம், போலிச் செய்திகளை கண்டறிதல், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடையங்கள் தொர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

இறுதியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர் ஐ.நடேசன் அவர்களுக்குரிய அஞ்சலி நிழ்வும் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர ஸ்ரீசேன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

ஐய்யாதுரை நடேசன் அவர்களை எனக்கு நன்கு தெரியும். நான் ஆசிரியராக இருந்த காலத்தில் என்னோடு அவர் இணைந்து கற்பித்திருந்தார். ஆசிரியர் தொழில் என்பது முழுமையான ஈடுபாட்டோடு மேற்கொள்பவர்களுக்குத்தான் அது பொருத்தம் என்னை பொருத்தவரையில் நான் பத்திரிகை துறையோடு தொடர்புடையவன் ஆகவே நான் ஆசிய துறையை விடுகின்றேன் என  என்னிடம் அப்போது அவர் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் வருமான வரித்துறை ஒரு உத்தியோத்தராக பணியாற்றி இருந்தார்.

அப்போதைய காலகட்டத்தில் அடிக்கடி நான் நடேசன் அவர்களை சந்திப்பதுண்டு. நடேசன் எப்போதும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் சிந்திக்கின்ற ஒருவர் ஆவார். எந்த ஒரு விடயத்தையும் அவர் மேலோட்டமாக பார்ப்பவர் அல்ல. மற்றவர்கள் கூறுகின்ற கருத்தையும் அவர் செவிமடுக்கக் கூடியவராக காணப்பட்டிருந்தார். நடேசன் அவர்களும் எந்த ஒரு இடத்திலும் பணிந்து போகின்றவர் இல்லை. எப்போதும் அவர் துணிந்து நிற்கின்ற மனப்பாங்குடன்தான் செயல்பட்டவர். நடேசன் அவர்கள் முதிர்ச்சி பெற்றவராக ஆய்வு கட்டுரைகளை எழுதுகின்றவராக காணப்பட்டிருந்தார்.  

அப்போது எங்களுடைய சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பையா அவர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். அந்த விடயத்தை நடேசன் அவர்கள் கட்டுரையாக எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைதான் அவரது அலுவலகத்தை ஏவலாளிகள் நாட வேண்டியவர்களாக இருந்தது. பல ஊடகவியலாளர்கள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஊடகவியலாளர் எல்லாம் அக்காலத்தின் இந்த நாட்டில் இருக்கலாமா என்ன கருத்து சுதந்திரத்தை வெளியிடலாமா? ஏன்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது நடேசன் அவர்கள் ஏவலாளிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அக்காலத்தில் எஜமானர்களால் கொந்தரத்துக்காரர்களுக்கு பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருக்கும். அவர்கள் மிகவும் குறைந்த காலத்திலேயே அவர்களது செயற்றிட்டங்களை நிறைவேற்றுவார்கள்.


“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என நம்மவர்கள் சொல்வதுண்டு அந்த அடிப்படையில்தான் தற்போதைய ஆட்சியில் சிலர் அகப்பட்டிருக்கின்றார்கள் என்பது உண்மை. ஈஸ்டர் தாக்குதல் தாரிகள் உள்ளிட்ட பலர் அகப்பட்டு இருக்கிறார்கள். எனும் சிலர் சுத்தக்காரர்கள் போன்று முகப்புத்தகல்களில் எழுதுகின்றார்கள். இன்னும் சிலர் படுகொலை செய்கின்றவர்களை சுத்தப்படுத்த நினைக்கின்றார்கள். எவர்கள் கொலை செய்தார்கள் என்பதை மக்கள் மூலமாக நாங்கள் தகவலை அடைந்திருக்கின்றோம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராசிங்கம் சிரேஸ்ட அரசியல்வாதி, சந்திரநேரு ஒரு சிரேஸ்ட அரசியல்வாதி, ரவிராஜ் சிவனேசன் இவ்வாறு பலரை கொலை செய்தார்கள். ரவீந்திரநாத், விரிவுரையாளர் தாம்பையா, ஆசிரியர் சதீஷ், ஆசிரியர் சோதிவடிவேல் உள்ளிட்ட கல்வியலாளர்களைக் கொலை செய்தார்கள்.  கொலைகள் என்பது இந்த நாட்டிலே கடந்த காலங்களில் கலைகள் போன்று நடைபெற்றிருந்தன. அவர்கள் எதுவும் செய்யலாம் ஆனால் தட்டிக் கேட்கக் கூடாது என்று அந்த அளவிற்கு அந்த சூழல் கொடூரமான சித்திரவதைகள காணப்பட்டிருந்தன.

அப்போதைய காலகட்டத்தில் மேஜர் சீலன் என்பவர் எனக்கு தொலைபேசியை எடுத்து அச்சுறுத்தலாக 60 சறம் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டார் எம்மைப் பற்றி தெரியும்தானே என அதட்டலாக என்னோடு தொலைபோசியில் கதைத்தார். அப்போதே காலகட்டத்தில் அவருடைய நோக்கம் என்னிடமிருந்து கப்பம் வாங்க வேண்டும் என்பதுதான். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் உருவாகி இருந்தன.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுவே மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் நடைபெற்ற சாதனையாகும். அவர்கள் இவ்வாறான படுகொலையில் உச்சத்தை தொட்டு இருந்தார்கள். அவர்கள் இழந்தது ஒரு பக்கமாக இருந்தாலும் அவர்களுக்குரிய நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை. குற்றவாளிகளை பாதுகாத்து பராமரிக்கின்ற ஒரு நாடாக இந்த நாடு இருக்கின்றதா என்பதை நாங்கள் சிந்திக்கின்றோம். குற்றவாளிகள் யார் என்பது தெரியும். என்னுடைய சொந்த தம்பிகூட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவர் எந்த ஒரு அமைப்பு சார்பிலும் செயற்பட்டு இருக்கவில்லை. 1989 ஆம் ஆண்டு 10 மாதம் முதலாம் திகதி கடத்தப்பட்டிருந்தார். அப்போது அவர்கள் என்னிடம் மூன்று இலெட்சம் ரூபாய் பணம் கேட்டிருந்தார்கள் எமக்கு அவர்கள் யார் என தெரியாது நாங்கள் யாரிடம் காசு கொடுப்பது எனவும் தெரியாமல் நாங்கள் அலைந்து திரிந்தோம். மட்டக்களப்பில் இருந்த பிளட் மோகன் என்பவரின் வால்களாக செயல்பட்டவர்கள்தான் இச்சம்பவம் நடைபெற்றது. தற்போதும் மட்டக்களப்பில் இரண்டுபேர் இவ்வாறு வால்களாக இருந்தவர்கள் உள்ளர்கள். இiது இந்திய அமைதி காக்கும் படை இலங்கை இருந்தால் காலத்தில் நடைபெற்றிருந்த சம்பவங்கள் ஆகும்.


அக்கலாம் மோசமான காலமாகும். நினைத்து பார்த்திருக்க முடியாத சம்பவங்கள் ஒட்டுக்குழுக்களாலும், கூலிப்படைகளாலும் இந்த மண்ணிலே அரங்கேறி இருந்தன.

எனவே இந்த நாட்டிலே உள்நாட்டு பொறிமுறை என்பது உளுத்துப்போன உருப்படியில்லாத ஒரு முறைமை ஆகும். அதன் மூலமாக எமக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கும் மாட்டாது. குற்றவாளிகளை பராமரிக்கின்றவர்கள், குற்றவாளிகளை வழி நடத்துகின்றவர்கள், தலைவர்களாக இருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையீனத்தால்தான் இழப்புக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதி என்பது சர்வதேச பொறிமுறை மூலமாகதான் எட்ட முடியும். இராணுவ தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்வது தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அவரின் சில செயலிகள் இயக்க முடியாமலும் வெளிநாட்டு கணக்குகளில் இருக்கின்ற நிதிகளை பெற முடியாத அளவுக்கு  நிலைமை சிறிது சிறிதாக இருக்கமடைந்து வருகின்றன.

இந்த ஸ்ரீலங்கா இந்த தேசத்துக்குள்ளே இருந்து கொண்டு தாங்கள் பெரிய யாம்பவங்களாக இருக்கலாம் என சிந்தித்தார்கள்.  இப்போது நிலைமை சற்று மாறி சிலர் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அகப்பட வேண்டியவர்கள் இன்னும் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அவர்களை அழிப்பதில் பங்கு கொண்டவர்கள் என்பதற்காக அவர்களுக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்கள்.

வடபகுத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர் யுத்தத்தை முடிப்பதற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் என பேசப்பட்டது. 

மட்டக்களத்திலும் சின்னபொடியன் ஒருவன் கடுமையான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்காக தற்போது சிலர் அழுது கொண்டிருக்கின்றார்கள். படித்தவர்கள்கூட அழுகின்றார்கள்.

பிரேமினி தனுஷ்கோடி எனும் பெண் ரி.ஆர்.ஓ எனும் அமைப்பில் வேலை செய்து வந்தார். அந்தப் பெண் பிள்ளையைக்கூட வெலிக்கந்தை இராணுவ முகாமிற்கு கடத்திக் கொண்டு சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றார்கள். இவ்வாறெல்லாம் கொடிய சித்திரவதைகளை செய்தவர்களுக்காக எங்களுடைய கண்களுக்குள் கண்ணீர் இறுகின்றதா, என்றுதான் சிந்திக்க வேண்டிய உள்ளது. அவர்கள் செய்த ஒவ்வொரு கொலைகள்ளையும் ஒவ்வொரு மனிதர்களிடம் கேட்டுப் பார்க்கின்றபோது இவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை என்பது அதை சொல்ல முடியாது. தற்போது அவர்கள் ருத்ராட்சம் பூனைகள் போன்று நாங்கள் கருவாடு உண்பதில்லை என்பது போன்று செயப்படுகின்றார்கள்.

எனவே நாட்டுப் பற்றாளர் நடேசன் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அது கிடைக்கக் கூடிய விதத்தில் இந்த அரசாங்கம் செய்யப்பட வேண்டும். ஒற்றை ஆட்சி பொறிமுறை, பௌத்த மேலாதிக்க அதிகாரத்தை செலுத்துகின்ற வழிமுறை, என்பன தமிழ் மொழியாளர்களை இரண்டாம் தரப் பிரதிகளாக அவர்கள் பார்க்கின்றார்கள். இரண்டாம் தரப் பிரதிகளாக நாங்கள் இருக்கின்ற வரைக்கும் நாங்கள் சம அந்தஸ்து பெறாத வரைக்கும் நமக்கான நீதி கிடைப்பது என்பது கடினமாக இருக்கின்றது. ஒற்றை ஆட்சி பொறிமுறை அல்லது உள்நாட்டு ஒருமுறை பௌத்த மேலாதிக்க கட்டமைப்பு என்பன நிச்சயமாக எனக்கு நீதியை தராது அது பக்க சார்பானதாகத்தான் செய்யப்படும்.

தற்போது கைது செய்யப்பட்டு சிறைசாலையில் சுரேசாலி என்பவர் இருக்கின்றார். அவர் தொடர்பான விபரத்தை மிக அழகாக துல்லியமாக ஆசாத் மௌலானா என்பவர் விளக்கங்களை வழங்கியுள்ளார். இந்த விடயங்களை எல்லாம் நாம் எடுத்துப் பார்க்கின்றபோது உண்மைகள் இப்போது உறக்கத்தை விட்டு கொஞ்சம் வெளிவருகின்ற தன்மை காணப்படுகின்றது. ஆகவே இது இறுதி வரைக்கும் சென்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலுத்கூட 270 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் 500 மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தார்கள் அருட்தந்தை மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கின்றது எனவே  44 மேற்பட்ட ஊடகவியலாளர் இந்த நாட்டிலே பாடுகொல்லப்பட்டார்கள் அவர்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: