சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும்
முக்கிய பிரச்சனைகள் தொடர்பிலான கலந்துரையாடல்.
சிறுபான்மை சமூகத்தின் மத்;தியில் தற்போது அதிகம் நிலவும் நிலவும் பிரச்சனைகள் தொடர்பிலும், அவற்றுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை(11.04.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுத்தி ஒன்றில் நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் புகாரி முகம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்வலர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுபான்மை சமூகத்தின் மத்தியில்
தற்போது காணப்படும் காணி, மொழி, அசுவசும செயற்பாடு, பொருளாதாரம், உள்ளிட்ட பல பிரச்சனைகள்
தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.
இப்பிரச்சனைகளில் காணி, மொழி, மற்றும் அசுவசும செயற்பாடுகள், ஆகியவற்றில் சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சனைகள், மற்றும் இழைக்கப்படும் அநீதிகள், தொடர்பிலும், அவற்றுக்கு எதிர்காலத்தில் எவ்வாறு தீர்வு காணுதல், என்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன.
இவ்வாறாக சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் விடையங்களுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திடம் பரிந்துரைகளை எடுத்துரைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வது எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment